தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு

 தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு

16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்!

16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே படத்தை தயாரித்து, பாரதிராஜாவை இயக்குநராக எஸ்.ஏ.ராஜ்கண்ணு அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து, கன்னிப்பருவத்திலே, கிழக்கே போகும் ரயில், பொண்ணு புடிச்சிருக்கு, மகாநதி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு என்னுடைய திரையுல பயணத்தில் பெரும்பங்கு வகித்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல் சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தகவல்: தினமணி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...