“பிரான்ஸ் கலவரம் ஒரு பார்வை”

 “பிரான்ஸ் கலவரம் ஒரு பார்வை”

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதில் காரை ஓட்டி சென்ற நகேல் என்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த சிறுவன் இறந்தான். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பிரான்சில் பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவை தீ வைக்கப்பட்டது.கடைகள் சூறையாடப்பட்டது. பாரீசில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்தல், கடைகளை அடித்து நொறுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் முழுவதும் 6-வது நாளாக இந்த கலவரம் நீடித்து வருகிறது. போராட்ட காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 24 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பாரீசில் உள்ள ஹேலெஸ் ரோச்சின் மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் இல்லத்தில் போராட்டக்காரர்கள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரியும் காரை போராட்டக்காரர்கள் ஓட்டிச்சென்று மேயர் இல்லத்தில் மோத விட்டனர். இதில் மேயரின் மனைவி, மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,இது கோழைத்தனமான தாக்குதல் என மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் தெரிவித்து உள்ளார்.

பிரான்சில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பிரான்சில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்து பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கும்பல் அங்கிருந்து கடைகளை சூறையாடினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. எனவே போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் 24 போலீசார் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் பல கட்டிடங்கள், கார்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடந்த 5 நாட்களாக ஆயிரத்து 311 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிபர் மேக்ரான் மேற்கொள்ளவிருந்த ஜெர்மன் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு தான் பிரான்சில் தங்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் வன்முறையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகளை சூறையாடி வருகின்றனர். எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.இதற்கிடையே, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று நடனமாடியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ‘பதற்றமான சூழலில், விருந்தில் பங்கேற்றது பொறுப்பற்ற செயல்’ என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...