4 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கியது

 4 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கியது

சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இன்று (5-10-2022) முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கியுள்ளது.

ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன் னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி யிருக்கிறது.

இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நான்கு நகரங் களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஜியோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் செல்போன்களில் ஜியோ 5ஜியை இயக்க போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படை யில் அமல்படுத்தப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் தற்போது 42,5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. 5ஜி சேவையை அளிப்பதன் மூலம் அதிவேக இணைய திறன்கொண்ட டிஜிட்டல் சமூகத்திற் கான மாற்றத்தை விரைவில் எட்டும். எந்த இணைப்பும் தொழில்நுட்பமும் மனிதவளத்தை யும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கெள்ள உதவும் என ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.


5G என்றால் என்ன?

தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி சேவையைவிடவும் பத்து மடங்கு வேகமாக சேவை வழங்கும் திறன் கொண்ட 5G தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை மிட் மற்றும் ஹை பேண்ட் ஸ்பெக்ட்ரம் டெலிகாம் சேவை வழங்குகிறது.

5G சேவையின் டவுன்லோடு ஸ்பீடு நொடிக்கு 10 ஜிகா பைட்ஸ் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 4G நெட்வொர்க்குகளில் அப்லோடு ஸ்பீடு விநாடிக்கு 50 மெகா பைட்ஸ் என வைத்துக்கொண்டால், 5G நெட்வொர்க்கில்நொடிக்கு 1 ஜிகாபைட்ஸ் வரை அப்லோடு ஸ்பீடு இருக்கும்.

​​5G என்ற வார்த்தையானது அதிவேகமான இணைய சேவை, (மல்டி-ஜி.பி.பி.எஸ். உச்ச வேகம்), குறைந்த காத்திருப்பு நேரம், அதிக நம்பகத்தன்மை, பெரிய நெட்வொர்க் திறன், அதிகமாகக் கிடைக்கும் தன்மை மற்றும் ஒரே மாதிரியான லேட்டஸ்ட் தரவு நிலை போன்றவற்றை உள்ளடக்கியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போதிருக் கும் வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் அப்லோடு மற்றும் டவுன்லோடு உள்ளிட்ட அனைத்தையும் ​​5G மூலம் செய்ய முடியும். 5G சேவையை லோ-பேண்ட், மிட்-பேண்ட் அல்லது ஹை-பேண்ட் என மூன்று வகை களாகப் பிரிக்கலாம். மில்லிமீட்டர் வேவ் 24 ஜிகாஹெர்ட்ஸ் வரை 54 ஜிகாஹெர்ட்ஸ் வரை செயல்படுத்தப்படலாம். இப்போது, ​​லோ-பேண்ட் 5G ஆனது ஜிகாஹெர்ட்ஸ் முதல் 900 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான 4G போன்ற அதிர்வெண் வரம்பைப் பயன்படுத்துகிறது. மிட்-பேண்ட் 5G ஆனது 1.7 ஜிகாஹெர்ட்ஸ் முதல் 4.7 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான அதிர் வெண்களைப் பயன்படுத்துகிறது. மேலும் ஹை-பேண்ட் 5G ஆனது 24-47 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இந்த 5ஆம் தலைமுறை சேவை 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை ஏலம் விடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...