விஜய் மக்கள் இயக்கத்துக்குத் தனி இணையப் பக்கம் தொடக்க விழா

நடிகர் விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து தலைமையில் அதிகாரபூர்வ இணைய பக்கங்கள் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

2-10-22 அன்று  அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம், மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் தொடக்க விழா நடைபெற்றது, மேலும் இவ்விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மதிய விருந்து  வழங்கப்பட்டது.

ஜூலை 2009இல் தனது நற்பணி ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக நடிகர் விஜய் மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார் விஜய். 2010 ஆம் ஆண்டில் விஜய்யின் ‘காவலன்’ திரைப்படம் வெளிவர தி.மு.க. தடை செய்வதாகக் குற்றம் சாட்டி, அ.தி.மு,வுடன் ஒருங்கிணைந்து திமுக அரசை தாக்கி வந்தது

விஜய் மக்கள் இயக்கம். பிப்ரவரி 2011இல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் தனது முதல் அரசியல் கூட்டத்தை நடத்தியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றது. பிறகு நடந்த தேர்தல்களில் தந்தை எஸ்,ஏ.சந்திரசேகரனை தவிர்த்து கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் இறங்கி கணிசமான வெற்றியைப் பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக பல முறை சென்னையிலும் மற்ற மாவட்டங் களிலும் விஜய் மக்கள் மன்றம் கூட்டங்களை நடத்தி கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது விஜய் மக்கள் மன்றத்தினர் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார்கள்.

அதன் வளர்ச்சியின் திட்டமாகத்தான் விஜய் மக்கள் மன்றத்திற்காகத் தனி இணைய தளப் பக்கங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு வந்திருந்த கட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிய விருந்து அளிப்பட்டது. பிறகு அவர்கள் உற்சாகமாகக் கலைந்து சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!