உயிர்காக்கும் முதலுதவி இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மருத்துவப் பயிற்சிக்கான TACT அகாடமியுடன் இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக CPR (Cardiopulmonary resuscitation) போன்ற உயிர்காக்கும் முதலுதவி வழங்கும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களில் நடத்துகிறது.

24.09.2022 சனிக்கிழமையில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கிறது.

25.09.2022 ஞாயிற்றுக்கிழமையில் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கிறது.

இந்த இரண்டு நாட்களிலும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும்.

மேற்கூறிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள், பதிவு செய்ய மற்றும் கூடுதல் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்;

24.09.2022 – https://tact-india.com/registration-form1/

25.09.2022 – https://tact-india.com/registration-form2/

இந்த CPR விழிப்புணர்வின் ஒவ்வொரு அமர்விலும் 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் இலவச CPR அமர்வை முன்பதிவு செய்ய மேலே குறிப்பிட்டுள்ள இணைப்புகளில் பதிவு செய்யலாம்.

மெட்ரோ இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!