பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி அமைச்சர்கள்
பிரிட்டன் தேர்லில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அலோக் சர்மா, 55, பருவ நிலை மாறுபாடு விவகார அமைச்சராகத் தொடர்கிறார்.
பிரிட்டன் தேர்தலும் லிஸ் டிரஸ் வெற்றியும்
பிரிட்டன் தேர்தலில் முதலில் முன்னணியில் இருந்தார் ரிஷி சுனக். அதன் பிறகு ரிஷி சுனக் படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு லிஸ் டிரஸ் முன்னுக்கு வந்து பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளி யினரான ரிஷி சுனக் 21 ஆயிரம் வாக்கு வித்தியாசம் தோல்வி அடைந்தார்.
பிரிட்டன் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே பிரதம ராகப் பதவி வகிப்பார். அந்த வகையில் பார்ட்டிகேட் ஊழல் எனப்படும் கொரோனா காலக் கட்டுப்பாடுகளை மீறியதால் எழுந்த சர்ச்சையையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியி லிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகினார்.
அதன்படி நடந்த தேர்தலில் ரிஷி சுனக்குக்கு முதலில் பிரிட்டன் மக்கள் ஆதரவுக் கரம் நீட்டினாலும் தன் நாடு, தன் தலைவர் என்கிற முறையில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோருக்கு அடுத்ததாக பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்கிற பெருமையைப் பெற்று பிரதமர் பதவியை அலங்கரித்திருக்கிறர் லிஸ் டிரஸ்.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர்தான் ரிஷி சுனக். கொரோனா காலத்தின்போது பொருளாதார நெரக்கடியைத் திறம்பட சமாளித்தவர் என்கிற பெயர் எடுத்தவர் சுனக்.
கொரோனா நடைமுறையில் போரிஸ் மேல் ஏற்பட்ட வெறுப்பின் காரண மாக முதலில் பதவி விலகியவர் சுனக். அவரது திறன் மேல் நம்பிக்கை வைத்து பிரிட்டன் பிரதமராக நிறுத்தப்பட்டார். முதலில் எம்.பி.க்கள் மத்தி யில் சுனக்கிற்கு அபாரமான செல்வாக்கு இருந்தது. ஆனால் கட்சி உறுப் பினர்கள் வாக் களிக்கும் சுற்றில் ரிஷி சுனக் சரிவைச் சதித்தார்.
காரணம்,
பிரிட்டனில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பிரச்னைகள் மக்களை வதைத்து வந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகூட கடுமையானது. வரி குறைப்பு குறித்த வாக்குறுதி அளிக்காத ரிஷி சுனக் “முதலில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடு படுவேன். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்த மாட்டேன்” என்று கறாராகக் கூறினார். ஆனால் லிஸ் டிரஸ் “நான் தேர்தலில் வெற்றி பெற்றால் உடனடியாக வரி குறைப்பை அமல்படுத்துவேன்” என்றார் அதுவே அவரது வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை லிஸ்டிரஸ் பிரிட்டன் பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது சாதகமானதே. கடந்த ஆண்டு இந்தியா – பிரிட்டன் இடையே விரிவான ஒப்பந்தம் கையெழுத்தானபோது அதைப் பெரிதும் வரவேற்றவர் டிரஸ்.
என்ன… ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆகியிருந்தால் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர் என்கிற பெருமை கிடைத்திருக்கும்.
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ், 6-9-2022 அன்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தன் அமைச்சரவையை அறிவித்தார். இதுவரை அறி விக்கப்பட்டவர்களில், வெள்ளையர் யாரும் இல்லை. மற்ற நாடுகளில் இருந்துவந்த சிறுபான்மையினருக்கே அதிக முக்கியத்துவம் தந்திருக் கிறார் லிஸ் டிரஸ்.
தற்போதைய அமைச்சரவையில், இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் படித்துள்ள இவர், அட்டர்னி ஜெனரலாக இருந்து வந்தார். இவரு டைய தாய் உமா, தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை பெர்னான்டஸ், கோவா வைச் சேர்ந்தவர். தாய் ஹிந்துவாகவும், தந்தை கிறிஸ்துவராக இருந்த போதும், சுயெல்லா, புத்த மதத்தைப் பின்பற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்தியா வைப் பூர்வீகமாகக்கொண்ட அலோக் சர்மா, (55) பருவ நிலை மாறுபாடு விவகார அமைச்சராகத் தொடர்கிறார்.
பிரிட்டன் அமைச்சரவையில் ஒரு தமிழ்ப்பெண் உள்துறை அமைச்சராகி யிருப்பது வரவேற்கத்தக்கது.