கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது ஓங்கி குரல்கொடுத்த மூக்கையா

 கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது ஓங்கி குரல்கொடுத்த மூக்கையா

கச்சத்தீவு இலங்கைக்கு என தீர்மானித்தபோது யார் அந்தப் பகுதிக்கு எம்.பி.யாக இருந்தார்?

1974 மற்றும் 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தவர் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் மூக்கையா தேவர்.

1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படுவது தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கடும் சீற்றத்துடன் அதற்கு எதிராகக் குரல் எழுப்பி னார். வரலாற்று அடிப்படையில் தரவுகளை எடுத்து வைத்துப் பேசியபோதும் அவர் பேசிய பேச்சுக்கள் கூட அவைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்பட்டன.

புவிசார் அரசியல் நலன்களுக்காக இறையாண்மையை மீறி இந்திரா காந்தி கச்சத் தீவை கொடுத்தார் இலங்கைக்கு. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 20 ஆண்டுகள் கழித்து அவர் மகன் ராஜீவ் காந்தியின் தலையில் அடித்தது இலங்கை ராணுவம்.

உண்மையில் இந்திரா காந்தியின் நோக்கமான அமெரிக்க ஆதிக்கத்தையும் ராணுவத்தளம் அமைக்கும் திட்டத்தையும் இலங்கையிலிருந்து அகற்றுதல் என்ற நோக்கம் கொஞ்சமும் நிறைவேறவில்லை. இன்று இலங்கை முழுமை யாக அமெரிக்கா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

தி.மு.க. வழக்கம் போலவே 50 பைசா அஞ்சல் அட்டை (POSTCARD) எழுதுவது, சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற கடினமான போர்க்குண மிக்க நடவடிக்கைகளை எடுத்தது. (தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான சிக்கல் களான தன்னுடைய மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி பெறு வதற்கு மட்டுமே அவர் சக்கர நாற்காலியிலும் டெல்லிக்கு நேரடியாகச் சென்று பேசுவார். மற்றபடி கச்சத்தீவு போன்ற சின்ன சிக்கல்களுக்கு 50 பைசா அஞ்சலட்டையோடு சரி.)

அப்போது அ.தி.மு.க.வும் இதை எதிர்த்தது. ஆனால் அவர்களுடைய யோக்கியதை என்ன என்பது எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் தெரிந்துவிட்டது. 1983ல் இவர் முதலமைச்சராக இருந்தபொழுதுதான் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ராமநாத புரம் மாவட்டத்தின் அதிகாரபூர்வமான வரைபடத்திலிருந்து கச்சத்தீவை நீக்கி விட்டார். (மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மாவட்ட ஆட்சியரும் அவர் தலைமையிலான மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்கவே முடியாது.)

ஆனால் திராவிடத்தின் இந்த இன்னொரு துரோகம் அதிகம் கவனம் பெறாமல் போய்விட்டது. (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83).

எப்படிப் பார்த்தாலும் அப்போது பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும் இராம நாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான மூக்கையா தேவரைத் தவிர வேறு யாரும் உள்ளார்ந்த உணர்வுடன் குரல் கொடுக்கவில்லை. திராவிடக் கட்சிகளும் காங்கிரசும் கச்சத்தீவை தங்களது அரசியல் லாபத்திற்காகவே இன்றுவரையிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத் தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியின ருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர். மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர்.

இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராம லிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.

1952இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரிய குளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.

இவருடைய கட்சியின் பெருந்தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். ராமனாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971இல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபா நாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபாநாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பி னராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது.

1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும்.

1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்கமுடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித் தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் .

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் “உறங்காப் புலி”, அதாவது தூங்காத புலி எனப் பெருமப் படுத்தி அழைக்கப்பட்டார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...