வரலாற்றில் இன்று – 11.08.2021 எனிட் பிளைட்டன்
குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் (Enid Blyton) 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.
இவரது கவிதைகள், கதைகள் 1921ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன.
‘மாடர்ன் டீச்சிங்’,’விஷ்ஷிங் சேர்’ தொடர்,’தி ஃபேமஸ் ஃபைவ்’,’சீக்ரட் செவன்’,’லிட்டில் நூடி சீரிஸ்’ ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன.
தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் ரஞ்சன் ராய் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார்.
1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஓனியாக் அமெரிக்காவில் பிறந்தார்.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி புகழ்பெற்ற திராவிட மொழியியல் ஆய்வாளரும,; அறிவியலாளருமான பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.