வரலாற்றில் இன்று – 08.08.2021 உலக பூனை தினம்

 வரலாற்றில் இன்று – 08.08.2021 உலக பூனை தினம்

மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

இவைகள் சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலக பூனை தினம் கொண்டாடப்படுகிறது.

உலிமிரி இராமலிங்கசுவாமி

இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.

இவர் புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1969), பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.

ஊட்டச்சத்து இயலில் ஆராய்ச்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவர் 2001ஆம் ஆண்டு மறைந்தார்.

சிவெத்லானா சவீத்ஸ்கயா

விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் வீராங்கனையான சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்தார்.

இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்தார். இவர் இரண்டு முறை ‘சோவியத் வீரர்’ என்ற உயர் விருதினை பெற்றுள்ளார். இவர் விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகின் பல முன்னணி வணிக நிறுவனங்களால் மேலாண்மை குறித்த அறிவுரைக்காக நாடப்படும் புகழ்பெற்ற பேராசிரியர் சி.கே.பிரகலாத் (கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்) கோயம்புத்தூரில் பிறந்தார்.

1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனான ரோஜர் ஃபெடரர் பிறந்தார்.

1901ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலறிஞர் எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்சு பிறந்தார்.

1884ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி கவிதைக்கான புலிட்சர் பரிசைப் பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞர் சாரா டீஸ்டேல் பிறந்தார்.

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...