வரலாற்றில் இன்று – 08.06.2021 உலக பெருங்கடல் தினம்
1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம்.
சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மூளைக்கட்டி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி உலக ப்ரெய்ன் டியூமர் தினம் (அ) உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.
இர.ந.வீரப்பன்
உலக தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட இர.ந.வீரப்பன் 1930ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இலங்கையில் பிறந்தார்.
இவர் சிறுகதை, ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழி போராட்டம், உலகளாவிய தமிழ் பண்பாட்டு தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.
இவரைப் பற்றி தமிழகத்தின் பாவலர் ஐயா கதிர் முத்தையனாரும், லண்டனை சேர்ந்த சுரதா முருகையனாரும் நூல்களை எழுதியுள்ளனர்.
இவர் தமிழ் உயர்வுக்காக தமிழ் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக தொண்டாற்றினார்.
தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொண்ட இர.ந.வீரப்பன் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1845ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஆன்ட்ரூ ஜாக்ஸன் (Andrew Jackson) மறைந்தார்.