வரலாற்றில் இன்று – 01.06.2021 உலக பெற்றோர் தினம்

 வரலாற்றில் இன்று – 01.06.2021 உலக பெற்றோர் தினம்

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினம் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை பெற்றோர்கள் தினமாக பிரகடனம் செய்தது.

உலக பால் தினம்

உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

பால் உற்பத்தி பெருக்குதல், பால் உற்பத்தி தொடர்பான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துதல் தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மர்லின் மன்றோ

அமரநட்சத்திரம், ஹாலிவுட்டின் ராணி மர்லின் மன்றோ 1926ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர், நோர்மா ஜெனி மார்டென்சன்.

இவர் 1950ஆம் ஆண்டு வெளிவந்த தி அஸ்பால்ட் ஜங்கிள் (வுhந யுளிhயடவ துரபெடந), டு நாட் பாதர் டு நாக் படங்கள் (னுழ ழெவ டீழவாநச வழ முழெஉம) இவருக்கு புகழை தேடித் தந்தன. இவர் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

ஒரு நடிகையாக மட்டுமின்றி, பாடகி, இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1968ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிக சிறப்புமிக்க பெண்மணியான ஹெலன் கெல்லர் மறைந்தார்.

1996ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவி ரெட்டி மறைந்தார்.

1999ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ஹோவர்கிராஃப்ட்டை கண்டுபிடித்த கிறிஸ்தோபர் கொக்கரல் மறைந்தார்.

1975ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியுமான கர்ணம் மல்லேஸ்வரி பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...