வரலாற்றில் இன்று – 29.05.2021 உலக தம்பதியர் தினம்

 வரலாற்றில் இன்று – 29.05.2021 உலக தம்பதியர் தினம்

உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அமைதி காப்போர் தினம்

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை. அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும், சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும் இத்தினம் மே 29ஆம் தேதி 2001ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

ஜான் எஃப் கென்னடி

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜான் எஃப் கென்னடி (John F Kennedy) 1917ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது இவர் அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். அப்போது ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இச்செயலுக்காக ‘பர்பிள் ஹார்ட்’ என்ற வீரப் பதக்கம் வழங்கப்பட்டது.

போரின் முடிவில் இவர் அரசியலுக்குத் திரும்பினார். இவர் எழுதிய Pசழகடைநள in உழரசயபந என்ற நூலுக்காக 1957ஆம் ஆண்டு ‘புலிட்சர் பரிசு’ வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக 43வது வயதில் பதவி ஏற்றார்.

உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த இவர் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.

சரண் சிங்

இவரின் 32வது நினைவு தினம் இன்று….!

இந்தியக் குடியரசின் முன்னாள் பிரதமரான திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார்.

சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல், வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1947ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.

1630ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...