சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஆவார்களா?
விமான ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா நோயாளிக்கு கரம் கொடுத்த சோனு சூட்!
படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்ட கொரோனா நோயாளியை, விமான ஆம்புலன்ஸ் மூலம் படுக்கை வசதியிருக்கும் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய உதவியிருக்கிறார் நடிகர் சோனு சூட்.
நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் செய்து வரும் பல உதவிகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கின்றன. அப்படி அவர் சமீபத்தில் செய்த உதவியும், இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த உதவி என்னவெனில், படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நாக்பூரை சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண்ணை, கொரோனா சிகிச்சைக்காக நாக்பூரிலிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவியிருக்கிறார்.
அதிகரித்து வரும் கொரோனா சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய நடிகர் சோனு சூட் முடிவு செய்துள்ளார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளாக நிறுவவும் சோனு சூட் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியாவில் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும் சோனு சூட் இறங்கி உள்ளார்.
1999 ஆம் ஆண்டு கள்ளழகர் திரைப்படத்தில் அறிமுகமான சோனு சூட், 47 வயதான அவர், தான் சம்பாதிப்பதில் பெரும்பகுதியை மக்களின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் உதவி செய்கிறார்.
பாதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தையும் விட வேகமாக உதவி செய்வது இந்த சோனு அவர்களின் பழக்கமாகி இருக்கிறது.
அவர்களுக்கு என்ற உதவி ஒன்றா இரண்டா ஏகப்பட்டது அத்தனையும் பட்டியலிட வேண்டும் என்றால், இந்த இணையதளமே நிரம்பிவிடும். அப்படி மனம் விரும்பி செய்கின்ற அத்தனை நல்ல காரியங்களும் அவருக்காக படம் பார்த்தது நன்மையாக தோன்றுகிறது என்று நிறைய பயன் பெற்ற பயனாளிகள் சொல்வதை கேட்க முடிகிறது.
தற்பொழுது கொரானா ருத்ர தாண்டவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆக்சிஜன் உதவி செய்வதற்காக ஒரு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாக சொல்லி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து இன்னும் ஒரு சில நாட்களில் அங்கிருந்து ஆக்சிசன் வெளியே வரும் என்ற தகவலை சொல்லும் பொழுது, நல்ல மனிதராக ஒரு நல்ல நடிகர் ஆகலாம் ஆனால் ஒரு நடிகர் நல்ல மனிதராக முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார.
சினிமாவில் அட்ராசிட்டி காட்டும் நட்சத்திரங்கள், ஆக்சிஜன் தட்டுபாடு போக்க முன்வராதது???
திரைப்பட நடிகர் நடிகைகள் கொரோனா பற்றி மௌனிப்பது ஏன்?
ஒரு திரைப்படம் எடுக்க பல கோடி பணம் செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள், 10000திற்கும் மேல் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுக்காமல் இருப்பது வேதனை,
சாமானிய ஏழை மக்களின் கொரொனா துயரை வைத்து கதை களமும், தான் தோன்றி தனமான வசனம் என்று தயாரிக்க / நடிக்க காத்திருக்கிறார்கள் போலும்…
இவர்கள் நினைத்தால் – தமிழ் நாட்டு மக்களுக்கு பல கோடி நிதி திரட்டி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கிக் கொடுக்கலாம், ஏன் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையே உருவாக்கி பல உயிர்களை காப்பாற்றலாம்.
ஆனால் இதுவரை எந்த நடிகர் நடிகையும் உதவி பற்றி பேசவில்லை. நிசப்தமான மௌனம் காக்கின்றனர்…
ஒருவேளை கொரொனா விழிப்புணர் ஏற்படுத்தும் அரசு விளம்பரம் / விழிப்புணர்வு தூதராக அறிவிக்கபட்டால் மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்குவரோ…
மனதை ஆழ சிந்தித்து பாருங்கள், எத்துனை ட்ரெண்டிங் / எத்துனை சேலஞ்குகள் – பாட்டில் மூடியை காலால் திறப்பது, ஒடும் காரில் இறங்குவது, தலைகீழாய் நிற்பது, தண்டால் அடிப்பது என்று…
தற்போது சூழலில் கொரொனா விழிப்புணர்வு சேலஜ் செய்ய கூட நேரமில்லை போலும்…
நடிகர்-நடிகைகள் முன்வந்து உதவ வேண்டும் மக்கள் உயிரை காப்பாற்றுவதற்கு ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி தர வேண்டும் குறைந்த பட்சம் கொரொனா கொடுமையையும் அதற்கான தற்காப்பு விழுப்புணர்வாவது பொது கடமை உணர்வோடு செயல்படுத்தல் வேண்டும்…
நம் தமிழ்நாட்டில் பல உச்ச நட்சத்திரங்கள் இருக்கின்றார்கள். கோடிகளில் புரளும் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சேர்த்து வைத்திருக்கும் அவர்கள், தாங்கள் சம்பாதிக்கும் இவ்வளவு பணமும் இந்த மக்களால் தான் கிடைத்தது என்பதை கொஞ்சம் கூட உணரவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.
கடந்த ஆண்டிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக கோலிவுடன் என்ற திரைத்துறையில் இருந்து யாரும் உதவிக்கு வரவில்லை. பஞ்சாப்பில் பிறந்த ஒரு சாதாரண ஒரு சோனு சூட், நடிகர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தாலும் செய்கின்ற உதவி எல்லாம் பார்த்தால் உச்சநட்சத்திரம் வாங்கும் சம்பளத்தையும் தாண்டிப் இருக்கிறதே என்று எண்ணும் அளவிற்கு அவர் செய்து அத்தனை பேருக்கும் உதவி செய்து அரவணைத்து செல்வது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னும் பல நட்சத்திரங்கள் களத்தில் இறங்கி, அவர்கள் சோனு சூட் போன்ற நல்ல காரியங்களைச் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இந்த நம் மக்கள் நன்றாக இருந்தால்தான் தாங்கள் கோடியில் பொருளை முடியும் என்ற அடிப்படை தத்துவத்தை கூட உணராத மனிதர்களாக உலா வருகிறார்கள் என்பது தான் வருத்தமான ஒரு விஷயம்.
அவர்களுக்கு இருக்கும் வசதிக்கு பலரையும் காப்பாற்றிவிடலாம் தற்போது சென்ட்ரலுக்கு அதிக எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழியில் காத்துக்கொண்டிருக்கிறது.
உள்ளே படுக்கை இல்லாமல் அதிக நோயாளிகள் உயிருக்கும் உடமைக்கும் போராடிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதையெல்லாம் வீட்டிலிருந்து நிச்சயமாக அந்த திரைநட்சத்திரங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி குறைந்தபட்சம் ஒரு எச்சரிக்கை வீடியோவாக எடுத்து அனைவரும் பாதுகாப்பாக ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஒரு குரல் கூட கொடுக்க யாருக்கும் மனசு வரவில்லை என்ற வருத்தம் இன்னும் நிறையவே இருக்கிறது.
சமூக நீதி, மதசார்பின்மை, சுகாதாரம், மருத்துவம், கல்வி இப்படி அனைத்துறைகளிலும் முன்னோடியாக இருக்கிறது. தமிழக திரைத்துறையில் அனைத்து நடிகர்களும் தானாக முன் வந்து உதவி செய்கிறார்கள். விழிப்புணர்வு செய்திகளை தருகிறார்கள் என்று இதிலும் முன்னோடியாக வேண்டும். இந்த வியத்திலும் முன்னோடியா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும் பொருத்திருந்து பார்க்கலாம்
🇮🇳🙏