வார ராசிபலன்கள் (18.01.2021 – 24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (18.01.2021 – 24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களின் மூலம் எதிர்பார்த்த பணிகளை திட்டமிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நன்மையளிக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

ரிஷபம் :

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனலாபம் மேம்படும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய வழிபாடுகளை செய்து வர எதிர்பார்த்த உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம் :

தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் குழப்பங்கள் இன்றி செயல்பட முடியும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் பெருமாளை வழிபட மனதில் இருந்துவந்த எண்ணங்கள் ஈடேறும்.

கடகம் :

ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். மாணவர்களுக்கு பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உதிரி வருமானம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் கருத்துக்களை பகிரும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

சிம்மம் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டுதலும், பெற்றோரின் ஆலோசனைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். உடனிருப்பவர்களுக்கிடையே பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி :

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். கற்பனை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். உத்தியோக பணிகளில் வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

வழிபாடு :
நரசிம்மரை வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

துலாம் :

அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை சற்று கவனத்துடன் கையாள வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுமையான முயற்சிகளின் மூலம் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களின் ஆதரவு மூலம் தனவரவுகள் மேம்படும். சுயதொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

விருச்சிகம் :

மனதிற்கு விருப்பமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புத்திரர்களிடம் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் பொறுப்புகள் உயரும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்வீர்கள். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருவை வழிபாடு செய்து வர சுபகாரியங்கள் நடைபெறும்.

தனுசு :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களுக்கிடையே உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் குழப்பமான சூழ்நிலைகள் காணப்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் எதிர்பாலின மக்களிடம் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது தேவையற்ற வதந்தியை தவிர்க்கும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபாடு செய்துவர கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

மகரம் :

முக்கிய விஷயங்களை பற்றி முடிவுகள் எடுக்கும் முன்பு யோசித்து செய்வது நல்லது. உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வு வேண்டும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர எண்ணத் தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள்.

கும்பம் :

இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உயர்வு சாதகமாக அமையும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மாணவர்கள் வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

மீனம் :

ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் சேமிப்புகள் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...