வரலாற்றில் இன்று – 14.01.2021 நரேன் கார்த்திகேயன்
தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார்.
இவருக்கு 2010ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.
க.வெள்ளைவாரணனார்
தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார் 1917ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் பிறந்தார்.
இவர் இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களையும் அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தார். இவர் இசைத்தமிழ் என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார்.
இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத்தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத்தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களை கொண்டுள்ளது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கியது.
தமிழ்மாமணி என பாராட்டப்பட்ட க.வெள்ளைவாரணனார் 1988ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1974ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1960ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழக எழுத்தாளர் ஜெ.வீரநாதன் பிறந்தார்.
1932ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சனிக்கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் ஹியூஜென் விண்கலம் இறங்கியது.