வரலாற்றில் இன்று – 05.10.2020 உலக ஆசிரியர் தினம்

 வரலாற்றில் இன்று – 05.10.2020 உலக ஆசிரியர் தினம்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது. அத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்றி வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக, யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது.

இராமலிங்க அடிகள்

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ இராமலிங்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சிதம்பரம் அடுத்த மருதூரில் பிறந்தார்.

முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.

பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.

‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865ஆம் ஆண்டு உருவாக்கினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே, உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணைமிக்க இராமலிங்க சுவாமிகள் 1874ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...