வரலாற்றில் இன்று – 24.09.2020 பிகாஜி ருஸ்தம் காமா

 வரலாற்றில் இன்று – 24.09.2020 பிகாஜி ருஸ்தம் காமா

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், பெண் சுதந்திரம் மற்றும் வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான பிகாஜி ருஸ்தம் காமா 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மும்பையில்; பிறந்தார்.

1907ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் ‘இந்திய சுதந்திரக் கொடி’ வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

இவர் இந்த மாநாட்டில் இந்தியாவில் மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் பிரிட்டிஷிடமிருந்து சுயாட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்காகப் போராடினார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு எழுதி வைத்தார்.

இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொது அமைப்புகளுக்கு பிகாஜி காமா அல்லது மேடம் காமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பிகாஜி காமா 1936ஆம் ஆண்டு மறைந்தார்.

ஜார்ஜ் க்ளாட்

பிரஞ்சு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளருமான ஜார்ஜ் க்ளாட் 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

இவர் நியான் விளக்கு மற்றும் பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் (Ocean thermal energy conversion) ஆகியவற்றை கண்டுபிடித்தவர். இவருக்கு 1921ஆம் ஆண்டு Leconte Prize வழங்கப்பட்டது.

ஜார்ஜ் க்ளாட் 1960ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1777ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தார்.

1948ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் மறைந்தார்.

2004ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய அறிவியலறிஞர் இராஜா இராமண்ணா மறைந்தார்.

1906ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...