வரலாற்றில் இன்று – 17.09.2020 ஈ.வெ.இராமசாமி

 வரலாற்றில் இன்று – 17.09.2020 ஈ.வெ.இராமசாமி

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனெஸ்கோ நிறுவனம்’ பெரியாருக்கு ‘புத்துலக தொலைநோக்காளர்’,’தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’,’சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது.

அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.

நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

பிறகு 1998ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றார். மீண்டும் 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முக்கிய நிகழ்வுகள்

1889ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தப் படைப்பாளியுமான வ.ரா. எனப்படும் வ.ராமசாமி ஐயங்கார் தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்கள10ரில் பிறந்தார்.

1930ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய வயலின் கலைஞரான லால்குடி ஜெயராமன் பிறந்தார்.

1953ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழறிஞர் திரு.வி.க. மறைந்தார்.

1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவின் பிக்காசோ என அழைக்கப்பட்ட இந்தியாவின் சிறந்த ஓவியக்கலைஞர் மக்புல் ஃபிதா உசைன் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...