இன்றைய தினப்பலன்கள் (12.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கேளிக்கை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சில செயல்பாடுகளின் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம் :

நீர்நிலை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு கிடைக்கும். செய்யும் செயல்களில் முயற்சியும், உழைப்பும் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தை பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : பொருள் வரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம் :

சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான சில மனக்குழப்பங்கள் நீங்கும். பத்திரிக்கை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : மனக்குழப்பங்கள் நீங்கும்.
புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம் :

பேச்சுத்திறமையின் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். சபை தொடர்பான பணிகளில் நிலையான எண்ணங்களுடன் செயல்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : சிக்கனமாக செயல்படுவீர்கள்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம் :

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். தலைவலி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பமான நிலையில் காணப்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரம் : குழப்பமான நாள்.

கன்னி :

எதிர்பார்த்திருந்த சில இடமாற்றங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். கால்நடைகள் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் உதவியால் நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சொகுசு வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : இடமாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

துலாம் :

சங்கீதம் சார்ந்த தொழில் நிபுணர்களுக்கு எதிர்பார்த்திருந்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற தொழில் சார்ந்த விஷயங்கள் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். பிறரை நம்பி எந்தவொரு செயல்களில் ஈடுபடும் பொழுது கவனம் வேண்டும். கடன் சார்ந்த சில பிரச்சனைகளால் மனவருத்தங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : காலதாமதமாகும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : மனவருத்தங்கள் ஏற்படும்.

விருச்சிகம் :

எதிர்பாராத சில பொருள் வரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
கேட்டை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

தனுசு :

எதிர்பாலின மக்களிடம் சற்று நிதானத்துடன் இருக்க வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களுக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். தியானம் செய்வதன் மூலம் மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

மகரம் :

மனைவிவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் அஞ்ஞானம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில செயல்பாடுகளை பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவுகள் மகிழ்ச்சி அளித்தாலும், சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம் :

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு மேம்படும். ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சிறிது ஞாபகமறதியின் மூலம் காலதாமதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
சதயம் : மனம் மகிழ்வீர்கள்.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

மீனம் :

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். மூத்த சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். வாடகை வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் மேலோங்கும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். தேவையற்ற தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்து கொள்வதன் மூலம் கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!