வரலாற்றில் இன்று – 09.08.2020 நாகசாகி தினம்

 வரலாற்றில் இன்று – 09.08.2020 நாகசாகி தினம்

அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (குயவ ஆயn) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு சுமார் 3.5மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்

ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

விநாயக கிருஷ்ண கோகாக்

கன்னட இலக்கியப் படைப்பாளி விநாயக கிருஷ்ண கோகாக் 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார்.

இவர் கன்டத்தில் எழுதி 1982ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாரத சிந்து ராஷ்மி’ என்ற காவியத்துக்காக 1990ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றவராவார்.

இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார். இவர் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஈ.கிருஷ்ண ஐயர் சென்னை மாகாணம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார்.

1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞானபீட விருது பெற்ற விநாயக கிருஷ்ண கோகாக் பிறந்தார்.

1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தாமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...