வரலாற்றில் இன்று – 07.08.2020 தேசிய கைத்தறி தினம்

 வரலாற்றில் இன்று – 07.08.2020 தேசிய கைத்தறி தினம்

தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன்

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்.

இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார்.

1960ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறினர்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இரவீந்திரநாத் தாகூர்

இவரின் நினைவு தினம் இன்று…! இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும், மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 80வது வயதில் (1941) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்தார்.

1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் மறைந்தார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மறைந்தார்.

1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...