*** ஜூனியருக்காக ஒன்றிணைந்த 100 மருத்துவர்கள்!

‘டெல்லியில் கொரோனாவை எதிர்த்து பணியாற்றிய ஒரு ஜூனியர் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான மருத்துவரின் தந்தையிடம் பணம் இல்லாததால், டெல்லியை சேர்ந்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள், அதிகாரிகள் உதவி செய்து ஜூனியர் மருத்துவரை காப்பாற்றியுள்ளனர்.

*** இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால், 543 பேர் உயிரிழப்பு!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மதுரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 8236 ஆக உயர்வு.

4758 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

3139 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று – பாதிப்பு 2,599ஆக உயர்வு

இதுவரை 1,118 பேர் குணமடைந்துள்ளனர் – 44 பேர் உயிரிழப்பு.

*** ஐ.பி.எல் அணிகளில் இருந்து 2012ம் ஆண்டு நீக்கப்பட்ட ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்க்கு, ரூ.4,800 கோடி இழப்பீடு வட்டியுடன் வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*** சென்னையில் மேலும் 27 பேர் கொரோனாவிற்கு பலி!

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர் பலி.

ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழப்பு.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பலி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...