வரலாற்றில் இன்று – 19.07.2020 மங்கள் பாண்டே

 வரலாற்றில் இன்று – 19.07.2020 மங்கள் பாண்டே

இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார்.

இவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.

பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு தனது 29வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.

மங்கள் பாண்டேவின் வரலாற்றை சித்தரிக்கும் The Rising என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

ஜயந்த் நாரளீக்கர்

இந்திய விஞ்ஞான மேதை ஜயந்த் விஷ்ணு நாரளீக்கர்; 1938ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார்.

நிலைமாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹோயிலுடன் (Fred Hoyle) இணைந்து ஹோயில்- நாரளீக்கர் கோட்பாட்டை (ர்ழலடந-யேசடமையச வாநழசல) உருவாக்கினார். 41கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Hoyle-Narlikar theory) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார்.

மேலும், இவரின் பங்களிப்பிற்காக பத்ம பூஷண் விருது (1965), இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இந்திரா காந்தி விருது (1990), பத்ம விபூஷண் விருது (2004), மகாராஷ்டிர பூஷண் விருது (2010), சாகித்ய அகாடமி விருது (2014) உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

1980ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் மாஸ்கோவில் ஆரம்பமானது.

1846ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அமெரிக்க வானியலாளரும், இயற்பியலாளருமான எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...