வாசிக்கப்படும் வரலாறுகள் | லதா சரவணன்
சிங்கப்பூரின் படைத்துறையினர் நாளாகவும், கனடாவில் கனடாநாள் என்றும், பாக்கிஸ்தானில் குழந்தைகள் நாளாகவும், இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் நாளாகவும், நெதர்லாந்தில் அடிமை ஒழிப்புநாளாகவும், புருண்டி பெல்ஜியத்திடமிருந்தும், ருவாண்டா, சோமாலியா ஆகிய நாடுகளும் விடுதலை பெற்ற நாளாகவும், கானாவின் குடியரசு நாளாகவும், சீனாவின் சீனப் பொதுவுடைமைக் கட்சி நிறுவன நாளாகவும் இந்த ஜூன் 1ம் தேதி பல்வேறு வருடங்களில் தன் கொண்டாட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக….!
சில வருடங்களுக்கு முன்பு சென்னை என்று பெயர் மாற்றப்பட்டு தற்போது கொரானாவால் கொடூரமாய் பாதிக்கப்பட்டாலும் பீனிக்ஸாய் மீண்டு வரக் காத்திருக்கும் சென்னை (அ) மதராஸ் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் செயல்பட்ட மூன்று வங்கிகளில் ஒன்று. கல்கத்தா, பம்பாய் என்ற பெயரிலும் அப்போது வங்கிகள் இயங்கிவந்தது. 1843 ஜூலை 1அன்று சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இந்த வங்கி 1921 ல் இந்திய இம்பீரியல் வங்கி என புதிதாக தொடங்கப்பட்டது இதுதான் தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி
ரஷ்ய மாஸ்கோவில் மாநிலம் மாஸ்கோவில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நூலகம் 1862 கிட்டத்தட்ட 158 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது இதே ஒன்றாம் தேதிதான்
கணினியின் வரவிற்கு முன்பு காகிதத்தில் முத்திரைப் பதித்த தட்டச்சுகருவி. 1847 – 20 நூற்றாண்டின் பெரும் பகுதியில் அலுவலகங்களையும், தொழில்முறை எழுத்தர்களையும் ஆக்கிரமித்து இருந்த தட்டச்சு இயந்திரம் முதல் சத்தத்தை ஏற்படுத்தியது
கடிதங்களை சரியான முறையில் பிரித்தெடுக்க தேவைப்படுவதும், சரியான முகவரியில் கொண்டு சேர்க்க பயன்படுவதுமான அஞ்சல் குறியீடுகள் இந்திய ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவையால் 1963 ல் ஜூலை ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது.
“மாசிலா உண்மைக் காதலே மாருமோ ” என்று மக்கள் திலகத்திற்காக பாடியவர், கண்களின் வார்த்தைகள் புரியாதோ என்று ஜெமினி சாவித்திரியின் காதல் வளர்ப்பதிலும், வாடிக்கை மறந்ததும் ஏனோ என்று சரோஜாதேவியிடம் ஜெமினி கேள்வி எழுப்ப காரணமாய் இருந்த பாடகரும் நடிகருமான திரு. ஏ.ஏம். ராஜா அவர்கள் பிறந்த தினம் இன்று
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த திறனாய்வாளர், எழுத்தாளர், தலைசிறந்த அரசியல் விமர்சகர் கவிஞர் என பன்முகத் தன்மை கொண்ட ஞானி அவர்கள் பிறந்த தினம் இன்று
குடும்பம் என்ற அமைப்பில் பெண்கள் படும் துயர்கள், அவர்களின் விருப்பங்கள் என்று மெல்லியலான குடும்ப கதைகள் மூலம் ஈர்ப்பு பெற்றவர். இறக்கும் வரையிலும் தேனீயாய் திரிந்த மனிதர். கதாசிரியர், வசனகர்த்தா,நடிகர் ஒரு சுழலுக்குள் கதையையும் கதாபாத்திரத்தையும் சிக்கவைத்து நீத்தி கரைசேர்க்கும் யுக்தியை அபாரமாய் கையாண்டவர் விசு அவர்களின் பிறந்த தினம் இன்று
திமுகாவின் மேடைப்பேச்சாளர், பொருளாளர், வேலூர் மாவட்டத்தின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றியவர் இலக்கியவாதியும் வழக்கறிஞருமாறு துரைமுருகன் அவர்களின் பிறந்த தினம் இன்று
இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் 2004ல் இருந்துள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் தலைவராக துவங்கிய திரு.வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று
அரியானா மாநிலத்தில் கர்னல் என்றும் ஊரில் பஞ்சாபிக் குடும்பத்தில பிறந்த கல்பனா சாவ்லா. சமஸ்கிருத மொழியில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருளாம் அதே போல் தன் வாழ்நாளை குடும்பத்தினருக்கு கற்பனையாகவே விட்டுச்சென்ற விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பிறந்த தினம் இன்று
ஒரு காலத்தில் பத்திரிக்கைத் துறையின் ஹாட் சாக்லேட், சாலை விபத்தில் தன் உயிரை இழந்த புன்னகையரசி, இளவரசர் சார்லசின் காதல் மனைவி டயானாவின் பிறந்ததினமும் இன்றுதான்.