வரலாற்றில் இன்று – 30.06.2020 மைக் டைசன்
உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.
இவர் 1982ஆம் ஆண்டு ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட் (heavyweight) சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையை பெற்றார்.
ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். இவர் 2006ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
பால் பெர்க்
வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் (Paul Berg) 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.
நியுக்ளிக் அமிலங்களின் (nucleic acids) உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வௌ;வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கியவர்.
முக்கிய நிகழ்வுகள்
1917ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான தாதாபாய் நௌரோஜி மறைந்தார்.
1937ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி உலகின் முதலாவது அவசரத் தொலைப்பேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1919ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சான் வில்லியம் ஸ்ட்ரட் மறைந்தார்.
1972ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி (டநயி ளநஉழனெ) அதிகரிக்கப்பட்டது.