வரலாற்றில் இன்று – 22.06.2020 – அடா யோனத்

 வரலாற்றில் இன்று – 22.06.2020 – அடா யோனத்

படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் (Ada Yonath) 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.

ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை (சiடிழளழஅந) ஆண்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என 20 ஆண்டுகால கடுமையான ஆராய்ச்சியினால் கண்டறிந்தார்.

ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார்.

இவர் நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரியவர்.

டான் பிரவுன்

கோடிக்கணக்கான வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் (Dan brown) 1964ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவில் நியு ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் (Exeter) பிறந்தார்.

பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞர் என தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ஹாலிவுட்க்கு 1991ஆம் ஆண்டு வந்தார். மேலும், இவர் ‘டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்’,’டிஸப்ஷன் பாயின்ட்’,’ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதினார்.

2003ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ‘தி டாவின்சி கோட்’ என்ற புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முக்கிய நிகழ்வுகள்

1990ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் ஈலியா பிராங்க் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...