வார ராசிபலன்கள் (22.06.2020 – 28.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

புதியவற்றை கற்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான முயற்சிகளும், செயல்பாடுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளால் திறமைகள் வெளிப்படும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் :
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளால் பொருள் வரவு ஏற்படும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கலை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். பழைய நினைவுகளால் குழப்பமான சூழல் உண்டாகும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். மற்றவர்களின் பொருட்களை கையாளும் போது கவனத்துடன் இருக்கவும்.

வழிபாடு :
மணிகண்டனை வழிபட்டு வர தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

மிதுனம் :

புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப்பெறுவீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுவிதமான மாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர்பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் சயன கோலத்துடன் இருக்கும் பெருமாளை வழிபட மனத்தெளிவு கிடைக்கும்.

கடகம் :

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளை மாற்றும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான எண்ணங்களும், செயல்பாடுகளும் உண்டாகும். இரும்பு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். எதையும் செயல்படுத்துவதற்கான வல்லமை உண்டாகும். அவ்வப்போது பார்வை தொடர்பான சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். உள்ளிருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.

சிம்மம் :

குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் முன்னேற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். மாமன்வழி உறவினர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சகோதரர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல்நலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வர மனக்கசப்புகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி :

தொழில் தொடர்பான சிந்தனைகள், செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். தனவரவில் இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகள் குறையும். செய்யும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் மனதிருப்தி ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்திலுள்ள பெரியோர்களின் ஆதரவும், நன்மதிப்பும் கிடைக்கப்பெறுவீர்கள்.

வழிபாடு :
நாக தேவர்களை வழிபட்டு வர பலவிதமான குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.

துலாம் :

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். சொந்த தொழில் புரிவோருக்கு மாற்றமான சூழல் அமையும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனைகள் மனதில் உண்டாகும். தோற்றப்பொலிவு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் தேடல் உண்டாகும். மூத்த சகோதரர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். எதிர்பாலின மக்களின் மீது ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.

விருச்சகம் :

சகோதர, சகோதரிகள் ஆதரவுகள் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். செய்யும் செயல்களில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். பக்குவமான மனநிலையுடன் செயல்படுவது நன்மையை அளிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

வழிபாடு :
சனிக்கிழைமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

தனுசு :

கூட்டு வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல்- வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அரசாங்க துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். கமிஷன் அடிப்படையிலான தொழிலில் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்காக சில செயல்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ஆன்மிக குருமார்களை வழிபட ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மகரம் :
பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சகோதரர் வழியில் நிதானமாக செயல்படவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். சம வயதினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடும் போது சிந்தித்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

வழிபாடு :
ஞாயிறுதோறும் நரசிம்மரை வழிபட தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கும்பம் :
வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபகரமான சூழல் உண்டாகும். இணையம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

வழிபாடு :
குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

மீனம் :
சகோதரர்களின் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தர்ம காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். நண்பர்களின் செயல்பாடுகளில் தலையிடும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் சம்பந்தமான கோப்புகளில் கவனத்துடன் இருக்கவும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் தன்வந்திரியை வழிபட்டு வர ஆரோக்கியம் மற்றும் மனதில் உண்டாகும் சஞ்சலங்கள் அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!