இன்றைய தினப்பலன்கள் (17.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (17.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : வருவாய் மேம்படும்.
கிருத்திகை : எண்ணங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். கிடைக்கின்ற சிறு வாய்ப்புகளையும் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்வது நன்மையை அளிக்கும். செய்யும் செயல்களில் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படவும். புதிய முதலீடுகள் மற்றும் கடன் வாங்குவது தொடர்பான செயல்பாடுகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : நெருக்கடி உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : கடன்கள் அதிகரிக்கும்.

மிதுனம் :
சகோதர, சகோதரிகளுக்கிடையே இருக்கக்கூடிய உறவுநிலை மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் ஆதரவான சூழ்நிலை அமையும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : உறவுநிலை மேம்படும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

கடகம் :

சுயதொழிலில் இலாபகரமான சூழ்நிலை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். சேமிப்புகளை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : முயற்சிகள் மேலோங்கும்.

சிம்மம் :

தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கலாம். ஆன்மிக வழிபாடு மற்றும் சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : செயல்பாடுகளும் அதிகரிக்கும்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : ஆதரவான நாள்.

கன்னி :

புதிய பயணங்களை மேற்கொள்வது பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தேவையில்லாத பலவிதமான எண்ணங்களின் மூலம் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். முன்பின் தெரியாத புதிய நபர்களின் அறிமுகங்கள் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : குழப்பமான நாள்.
அஸ்தம் : சங்கடங்கள் ஏற்படலாம்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

துலாம் :

சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். நீண்ட நாள் சேமிப்புகள் கைகளில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சில சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதில் பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : மந்தத்தன்மை ஏற்படும்.

விருச்சிகம் :

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : பலன்கள் காலதமாதமாகும்.
அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கேட்டை : முதலீடுகள் அதிகரிக்கும்.

தனுசு :

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல்நிலையில் ஏற்பட்டிருந்த சிறுசிறு உபாதைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவதற்கான சூழல் அமையும். தாய்மாமன் வழியில் ஆதரவான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : புத்துணர்ச்சி ஏற்படும்.

மகரம் :

கலைத்துறை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். மனை விற்பது, வாங்குவது தொடர்பான காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் இனம் புரியாத புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

கும்பம் :

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்லூரி படிப்பிற்கான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலை அமையும். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். தானிய சம்பத்துக்களால் அபிவிருத்தி உண்டாகும். தந்தைவழி சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : இலாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : அபிவிருத்தி உண்டாகும்.

மீனம் :

இளைய சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையை அளிக்கும். மனதில் புதுவிதமான தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை ஏற்படும்.
ரேவதி : மாற்றம் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...