வரலாற்றில் இன்று – 09.06.2020 ஜார்ஜ் ஸ்டீபன்சன்
ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார்.
இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.
மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரிசெய்து இரும்பு தண்டவாள ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1829ஆம் ஆண்டு ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசு வென்றது.
இங்கிலாந்தில் செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது. அடிப்படை கல்வி கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1848ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார்.
1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார்.