இன்றைய தினப்பலன்கள் (08.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (08.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். மனைவி வகையிலான உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அசுவினி : பொருளாதாரம் மேம்படும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : திட்டங்களை வகுப்பீர்கள்.

ரிஷபம் :

நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் பலவிதமான சிந்தனைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : அமைதி வேண்டும்.
மிருகசீரிடம் : சிந்தனைகள் உருவாகும்.

மிதுனம் :

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : கவலைகள் நீங்கும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : உயர்வு உண்டாகும்.

கடகம் :

வீட்டில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடைகள் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : தனவரவு மேம்படும்.
ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.

சிம்மம் :

தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ள உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப் படுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : முயற்சிகள் மேலோங்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

கன்னி :

புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : முடிவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : தெளிவு உண்டாகும்.

துலாம் :

அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சொன்ன விதத்தில் நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : செல்வாக்கு உயரும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம் :

தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் மேம்படும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இலாபகரமான சூழல் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : மனச்சோர்வு உண்டாகும்.
அனுஷம் : தனவரவுகள் மேம்படும்.
கேட்டை : அமைதி வேண்டும்.

தனுசு :

நினைத்த செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : மாற்றம் பிறக்கும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் :

பணியில் பொறுப்புகள் உயரும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாகும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் உயரும்.
திருவோணம் : முதலீடுகள் உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.

கும்பம் :

புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் :

நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். தொழில் தொடர்பான முயற்சிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...