வரலாற்றில் இன்று – 07.06.2020 மகேஷ் பூபதி

இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் ஸ்ரீனிவாஸ் பூபதி(Mahesh Shrinivas Bhupathi) 1974ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

இவர் கலப்பு இரட்டையர் பிரிவில், சானியா மிர்சாவுடன் இணைந்து 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றார்.

2001ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

காஜா அஹமது அப்பாஸ்


இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் (Khwaja Ahmad Abbas) 1914ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி அரியானாவில் பானிபட் என்னும் ஊரில் பிறந்தார்.

இவர் பிளிட்ஸ் இதழில் சேர்ந்த பிறகு, அதன் உருது பதிப்பில் ‘ஆசாத் காலம்’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் இந்திய வரலாற்றில் நீண்ட கால அரசியல் தொடராகும்.

இவர் தர்தி கே லால் (Dharti Ke Lal) என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இவர் திரைக்கதை எழுதிய ராஜ்கபூரின் படங்களான ஆவாரா, ஸ்ரீ 420, ஜாக்தே ரஹோ, மேரா நாம் ஜோக்கர், ஹென்னா போன்றவை பிரபலமானது.

இவர் நர்கீஸ் தத் விருது(யேசபளை னுரவவ யுறயசன), வோரோஸ்கி இலக்கிய விருது, காலிப் விருது, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல களங்களில் தனி முத்திரை பதித்த காஜா அஹமது அப்பாஸ் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்


1917ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டொபீகாவில் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!