கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு […]Read More
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.நாகமணியின் மேற்பார்வையில், பகுதி நேர முனைவர் பட்டம் பெற்ற சிடிஏசியின் மூத்த இயக்குநர் வி. சந்திரசேகர் கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை கண்டுபிடித்துள்ளார். அதனுடன் தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சூரியஒளி தகடு (சோலார் பேனல்), மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான தீவிர மின்தேக்கி (அல்ட்ரா கேப்பாசிட்டர்) […]Read More
வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!
இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கு கால் கடுக்க மின் அட்டயை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். மின் அட்டையில் ஒரு அளவு அங்கே கட்டச் சென்றால் ஒரு அளவு என குளறுபடிகள் நீடித்தன. அதன் பின்னர் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு அரசு கணினிமயமாக்கியது. இதனைத் தொடர்ந்து கரண்ட் பில் கட்டும் பணி எளிமைப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு […]Read More
தவெக – மகளிர் அணிக்கு தனி அலுவலகம் திறப்பு..!
சென்னையில் முதல் முதலில் தவெக மகளிர் அணிக்கென தனி அலுவலகம் வில்லிவாக்கம் பகுதியில் திறக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் முக்கிய முடிவுகள், முக்கிய ஆலோசனைகள், நிகழ்ச்சி ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு முடிவுகளை எடுக்க தவெக அலுவலகம் முதன்மையாக விளங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய தவெக கிளை மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் […]Read More
மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
“இந்தியா” கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக ரேஷனில் வழங்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இந்தியா கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும்; இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் என்னவெல்லாம் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என பட்டியலிட்டு வருகிறார் ராகுல் காந்தி. சமூக வலைதளங்களிலும் இதனை பகிர்ந்து வருகிறார் ராகுல் காந்தி. இது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவிக்கையில், […]Read More
விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்விவிருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5000 பேருக்கு காலை மற்றும் மதிய […]Read More
முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்கள் வாழ்க்கை…!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம் முடிவுக்கு வருகிறது. பல தலைமுறைகளைக் கடந்து வாழ வைத்த மண்ணை விட்டு அகல மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுக்க தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். விடைபெறும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை, காக்காச்சி நாலுமுக்கு, ஊத்து குதிரை வெட்டி உள்ளிட்ட மலை கிராமங்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலையும் 4500 அடி […]Read More
காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்வு..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகரித்ததிருக்கிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து 1000 கன அடி முதல் 800 கனஅடி வரை மட்டுமே நீர்வரத்து இருந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆறு ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்தது. கர்நாடக பகுதியிலிருந்து நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக தண்ணீர் இன்றி வறண்ட காவிரி ஆற்றில் இன்று […]Read More
குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 18- ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திண்டுக்கல், தேனி, தென்காசி, […]Read More
பிளஸ் 1 பொதுத் தேர்வு | 96.02% பேர் தேர்ச்சியுடன் கோவை முதலிடம்..!
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, […]Read More
- வெளியானது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் டிரெய்லர்..!
- Mười sòng bạc trực tuyến bằng tiền thật tốt hơn & Trò chơi đánh bạc tháng 12 năm 2024
- ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு..!
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení A New Sázky Online”
- 1win
- மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி..!
- இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை..!
- சபரிமலை கோயில் நடை அடைப்பு..!
- டான்செட் தேர்வுக்கு 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!