ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரெயில்கள் விவரம் வெளியீடு

பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த…

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் திருவிழா உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.…

ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி…

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஒரு பைபர் படகு தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள்…

ஊட்டியில் உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை

பொதுமக்கள் வெளியே செல்லும்போது கம்பளி ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலமாக உள்ளது. நவம்பர் தொடக்கத்தில் நீர் பனிப்பொழிவும், பின்னர் உறை பனிப்பொழிவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில்…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்டிரல் – மங்களூரு, ஈரோடு – நாகர்கோவில், செந்திராபாத் – வேளாங்கண்ணி, பெங்களூரு – கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள்…

செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று பேச்சுவார்த்தை

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி…

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக…

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

22 முதல் 24-ந்தேதி வரை குழாய் குடிநீர் வினியோகம் ரத்து

சென்னை, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடசென்னை வளர்ச்சி திட்டப்பணியின் கீழ், மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!