இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில்…
Category: விளையாட்டு
இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி..!
காஷ்மீரின் பஹல்காமில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சி நடத்தியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட…
“மேகதாது பணிகளை தொடங்க தயார்” – சித்தராமையா பேட்டி!
மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயாரா உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மலை மாதேஸ்வர கோயிலில் நேற்று ஸோய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 25)
பன்னாட்டு பெங்குவின் தினம் (International Penguin Day) ஏன் கொண்டாடப்படுகிறது? பெங்குவின்களின் அழிவு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பெங்குவின்கள் அண்டார்க்டிகா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. காலநிலை மாற்றம்,…
மு.வரதராசனார் (1912-1974)
அறிமுகம் மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 – அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். வாழ்க்கைச் சுருக்கம் மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்குப் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காகக் கிராமத்துக்குச் சென்று, அங்குத் திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். 1931-இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர்த் தாமே பயின்று 1935-இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1935-ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்குத் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். பேராசிரியராகப் பணி 1939-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் “கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்” என்ற பொறுப்பை ஏற்றார். 1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது. 1939-இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்குப் பணியாற்றினார். 1945-இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948-ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத்…
வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 25)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
