கோவில் சுற்றி
திருச்செந்தூர் கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்துள்ளனர். இதற்காக […]
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது..!
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் இன்று (ஜன.,12) உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இந்த கோவிலில் உள்ள யானை காந்திமதி 56, உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் காந்திமதி செல்லும். நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு […]
திருச்செந்துாரில் நாளுக்குநாள் தீவிரமாகும் கடல் அரிப்பு..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், சமீபமாக கடல் திடீரென உள்வாங்குதல், அலையின் சீற்றம் அதிகரிப்பு, கடற்கரையில் மண் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் கடலில் புனித நீராடுவதில் சிரமம் இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு, 2022ல் ஆய்வு நடத்திய சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர், அமலிநகர், ஜீவாநகரில் ஒரே நேரத்தில் துாண்டில் வளைவு கட்டவும், கரை பாதுகாப்பு […]
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் மோதல்..!
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நிகழ்வு […]
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில்குவிந்த பக்தர்கள்.!
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு..!
திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகிய 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் […]
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு..!
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் அறுபடை வீடுகளுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். குடும்ப […]
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்..!
இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவுவதாக கூறப்பட்ட எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதே போல் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. […]
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தநிலையில் வருகிற 10-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து […]
திருப்பாவை பாசுரம் 19
திருப்பாவை பாசுரம் 19 “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். பொருள் : குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த […]