• தொடர்
  • நிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா

நிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா

10 months ago
207
  • தொடர்
  • நிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா

ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா ஒளியே

வசுமதி மெதுவாக காரிடாரில் நடந்தாள்.நேராகச் சென்று திரும்பினால் ஹரிணி இருக்கும் இடம் வந்து விடும். அவளைப் பார்த்தாலே மனசுக்குள் ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்து விடும்.

புன்னகையுடன் மேம் என்று வந்து கையைப் பிடித்துக் கொள்வாள்.

கீமோ கொடுக்கும் வரை அருகில் இருப்பாள். ஆர் யூ ஆல்ரைட் என்று கேட்டபடி எதானும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். ரூமில் கொண்டு வந்து விட்டு மாலை டிச்சார்ஜ் செய்யும் வரை கூடவே இருப்பாள்.

ஏனோ மித்ராவுக்கு அவளைப் பிடிக்காது. ஏன் என்று கேட்டிருந்தால் வசுமதிக்கு விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் எப்போதும் மற்றவர் விஷ்யத்தில் மூக்கை நுழைக்கும் விஷயம் அவளுக்குக் கிடையாது.

அவளே சில வேலைகளை மித்ராவிடம் கொடுத்து நீ அதைச் செய். எனக்கு ஹரிணி இருக்கிறாள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட அவளுக்கு ஏக சந்தோஷம்.ஜெர்மனியிலிருந்து வந்த சில டெலிகேட்ஸை மாமல்லபுரம் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இரண்டு நாள் தங்கி அவர்களுக்கு கம்பெனி கொடுத்தால் அவளுக்குப் பணம் சிறிது அதிகமாகக் கிடைக்கும்.

அதே நேரம்தான் வசுவுக்கு கீமோ கொடுக்க நாள் கொடுத்திருந்தார்கள்.

வசுவுக்கு கருப்பையை எடுத்திருந்தார்கள். கான்சர் ஆரம்ப நிலை என்பதால் கீமோ கம்மியாகக் கொடுத்தால் போதும் என்றிருந்தார் டாக்டர். வசு அதை மிகவும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டாள். துணிவுடன் தன் சிகிச்சையை மேற் கொண்டாள்.

சிலர் வலி தாங்காமல் அழுவார்கள். அழகு போய் விட்டதே என்று கலங்குவார்கள்.

“எதுக்கு அழணும். இதன் பிறகு சத்தான ஆகாரங்கள் சாப்பிட்டா இதை விட கருகருன்னு முடி வளரும். எத்தனை மேக் அப் சாதனங்கள் வந்திருக்கிறது. அழகுங்கறது நம் துணிச்சலும், தைரியமும், தன்னம்பிக்கையும்தான் என்றவள் அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று பேசுவாள். ஏழைகளுக்கு என்று பொது வார்டு இருந்தது.அங்கு குழந்தைகள், பெண்கள் என்று நோயாளிகள் இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான் பன், பிஸ்கெட், பழங்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொண்டு வருவாள்.

அதனாலேயே ஹரிணிக்கு அவளைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும்.

முதல் முறை கவுன்சிலிங். அடுத்து இரண்டு முறை அந்த சிகிச்சைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்து போனாள். அடுத்து ஒரு கீமோ முடிந்து விட்டது. அடுத்து இருபது நாட்களுக்கு மேல் கழித்து வர வேண்டும் என்பதால் நடுவில் வந்து அந்த நோயாளிகளைப்பார்த்து விட்டுப் போவாள். அப்போது ஹரிணிக்குப் பேச நேரம் கிடைக்காது.

இந்த முறை அவளுக்கு வசுமதியிடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.

முக்கியமாய் மித்ராவைப் பற்றி, அவளைப் பற்றி கேட்ட செய்திகள் என்று.

“மேம், வாங்க, வாங்க” என்று ஹரிணி வேகமாக வந்தாள்.

“உங்களுக்கு ரூம் போட்டு வச்சிருக்கேன்.அங்க போலாம். ஒரு மணிக்குத்தான் டைம்.”

எப்பவும் அவளுக்கு என்று ஏ.சி ரூம் போட்டு வைத்திருப்பாள்.’

“நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் போய்ட்டு ஒரு அரை மணி நேரத்தில் வரேன் என்று கிளம்பினாள்.

என்ன இத்தனை அவசரம்?”

எங்களுக்குத் தெரிந்த குடும்பத்து வேலையாள் சம்சாரத்துக்கு கேன்சர் சிகிச்சை. பாருங்க மேம், அருமையான மனிதர். பொண்டாட்டி கலயாணம் ஆன கையோட வேறு ஒருத்தன் கூட ஓடிப் போயிட்டா? இருபது வருஷம் ஆச்சு. இப்ப கேன்சர்னு சொன்னதும் அவன் விட்டுட்டு போயிட்டான்.ஆனா இவர் அவளுக்கு சிகிச்சை தரார். சந்தீப் வந்தார்ல, அவர் வீட்டு வேலையாள்தான்.. ஆனா வேலையாள்னு சொல்ல மாட்டோம். அவர் அப்பா தன் கூடப் பொறந்த தம்பியாத்தான் நினைக்கிறார்.”

“கிரேட்.” வசுமதிக்கு அவனிடம் சுவாரஸ்யம் இல்லை.

சந்தீப்தான், மித்ராவ கலயாணம் செஞ்சிக்கப் போறானா?”

“ஆமாம் மேம். ஆனா சக்தியில் போய் விழறான்.”

“ஏன் இப்படிச் சொல்றே?”

“எனக்கே இப்பத்தான் மேடம் விஷயம் தெரியும். நம்ப ஹாஸ்பிடலுக்கு வந்தவர் சொன்னார்.என்னால நம்ப முடியலை. அவர் ஒருநிறுவனத்தின் பி.ஆர்.ஓ. அவர் தற்செயலா போன வாரம் உங்க கூட வந்த மித்ராவைப் பாத்திருக்கார். நேத்து வந்தப்போ கேட்டார். மித்ரா உங்களுக்கு என்ன வேணும்னு? சொன்னதும் சொன்னார். கால்-கேர்ல்னு.”

“சோ வாட்? உனக்குத் தெரிஞ்ச விஷயத்தை நீ சந்தீப் கிட்டச் சொல்லேன்”

“எப்படி மேடம் சொல்றது?”

“ஏன் சொன்னா என்ன”?

“என்னைத்தான் மேடம் அவருக்குன்னு நிச்சயம் செஞ்சிருக்கு. நான் பிறந்த அன்னைக்கே அவருக்கு நான்னு முடிவு செஞ்சிட்டாங்க. இப்ப அவர் வேற பென்ணை விரும்பறார். இப்போ நான் போய் இதைச் சொன்னா வீண் பழி சுமத்தறார்னு சொல்ல மாட்டாங்களா?”

ஓ! இப்படி ஒரு பிரச்சினையா?”

“அவர் அப்பா ரொம்ப நல்ல டைப் மேடம். சந்தீப் இப்படின்னு தெரிஞ்சதும் லேசா ஸ்ட்ரோக் மாதிரி வந்திருச்சு. பாவம் அவர் மனைவியும் அவரை விட்டுப் போய்ட்டாங்க. பையந்தான் உயிர். என் மேல் ரொம்ப உயிர்”

ஹரிணி வீட்டிலிருந்து அவளுக்கு காஃபி கொண்டு வந்திருந்தாள். அதை டம்ளரில் ஊற்றித் தந்தாள்.அதைக் கையில் வாங்கிய வசுமதி தன்னை மறந்து சிரித்தாள்.

“ஏன் மேடம் சிரிக்கறீங்க?”

“எஜமான், வேலைக்காரன்னு எல்லார் மனைவியும் ஓடிப் போச்சு. நாளைக்கு சந்தீப்புக்கு எப்படியோ?”

“மேம். பிளீஸ். சாய் அப்பாவைப் பத்தி மோசமா பேசாதீங்க. அவர் மனைவி வேற யார் கூடயும் ஓடிப் போகலை. தன் திறமைகலை வெளிப்படுத்த குடும்பம்கிற கட்டு ஆகாதுன்னு போயிட்டாங்க. ஆனா திரும்பி ஒரு நாள் வருவாங்கன்னு காத்திருக்கார் தெரியுமா?’மனைவியின் பிறந்த நாள், கல்யாண நாள் அன்று ஹாஸ்பிடல் முழுக்க நோயாளிகளுக்கு உணவு தருவார். கேண்டீன்ல சொல்லி நல்ல உணவு சமைச்சிப் போடுவார்.அதுக்குன்னு டாக்டர்கிட்ட பர்மிஷன் வாங்கிடுவார்.நல்ல மனசு மேடம். இவரை விடவா வெளி நாட்டு வாழ்க்கை முக்கியம்னு நினைச்சிப்பேன்.”

“சாய் அப்பாவா?”

“ஆமாம் மேடம். நான் அவரை அப்பான்னுதான் கூப்பிடுவேன். என் அப்பா சங்கரனும், சாய் அப்பாவும் ஒண்ணாப் படிச்சவங்க.ஒண்ணா வங்கியில வேலை பார்த்தவங்க.

“சாய்? வசுமதி உச்சரித்துப் பார்த்தாள். இனித்தது.

“சாய் வித்தியாசமா இருக்கே. முழுப் பெயரும் சாய்தானா?

“இல்லை மேடம். சாய் நாதன். இங்கதான் பாரத வங்கியில் வேலை பார்த்தார். திருவான்மியூரில் வீடு.”

விருட் என்று எழுந்தாள் வசுமதி. விரல்கள் நடுங்கியது. விழாமல் இருக்க கட்டிலைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னாச்சு மேம்?” ஹரிணி பதறி அவளைப் பிடித்துக் கொண்டாள்.

“ஒண்ணுமில்லை. நத்திங். அந்த வேலையாள் பெயர் என்ன?”

“சுக்கான்.”

பிரமிப்புடன் நின்றாள் வசுமதி.

இந்த பிரபஞ்சம்தான் எத்தனை அற்புத சக்தி படைத்தது?எவ்வளவு அழகாய் காய் நகர்த்தி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கிறது. சாய் அடிக்கடி சொல்லுவார். நீ என்னை விட்டு எங்கும் போக முடியாது என்று.என் அன்பெனும் பாசக் கயிறு உன்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், உன்னை என்னிடமிருந்து பிரிக்காது. உனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்று.

எத்தனை உண்மை?

வசு தளர்ந்து அமைதியாய் உட்கார்ந்தாள்.

மகிழ்ச்சியும்,பரவசமுமாய் மனசு துடித்தது.

லேசாய் கண்ணீர் வழிந்து நெகிழ்வில் இதயம் வேகமாய்த் துடித்தது.

தன்னுடைய நோய்க்கான சிகிச்சையை அவள் தைரியமாக ஏற்றுக் கொண்டாலும் ஆழ் மனது சாய் நாதனின் அரவணைப்புக்கு ஏங்கியது. அவர் மார்பில் முகம் புதைத்து தன் வேதனைகள், வலியை மறக்க விரும்பினாள்.

ஆனால் மீண்டும் எந்த முகத்துடன் தான் அவரைச் சந்திப்பது?

சந்தீப் அம்மா என்று தன்னை ஏற்றுக் கொள்வானா?’

மகிழ்ச்சி,ஆனந்தம், வருத்தம் சந்தேகம், குழப்பம் என்ற உணர்வுகளால் சூழப்பட்டாள் வசுமதி.ஹரிணி பயந்து போனாள்.

“மேம் டாக்டரை வரச் சொல்றேன்.”

“நோ, வேண்டாம் ஹரிணி? எனக்கு ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா?”

“ஷ்யூர்.சொல்லுங்க மேம்.”

“சுக்கானை நான் பாக்கணும்.வரச் சொல்ல முடியுமா?”

“கண்டிப்பா. நானே கூட்டிட்டு வரேன்.”

“நானே வருவேன். ஆனா என்னைப் பார்த்த பரவசத்துல அவன் அந்த வார்டையே கதிகலங்க வச்சுடுவான். அவன் என் ஆஞ்சனேயன்.” வார்த்தைகள் நெகிழ்வோடு வந்தது.

ஹரிணி சந்தேகமாகப் பார்த்தாள்.

“அ…அப்போ நீங்கதான் வசும்மாவா?”

கற்பூர புத்தி உடனே ஒண்ணும், ஒண்ணும் ரெண்டு என்று கணக்கு போட்டு விட்டது.வசு புன்னகையோடு தலை யாட்டினாள். ஹரிணி தாவி அவளைக் கட்டிக் கொண்டாள். அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அவள் மனசுக்குள் வசு மேல் ஒரு கசப்பு இருந்தது. புருஷனை உதறிட்டுப் போனவள் என்று. அவளைப் பற்றி தெரியாமல் வெறும் நோயாளியாகப் பார்த்தபோது அவளுக்கு வசுவை மிகவும் பிடித்தது.அவளின் தோற்றம்.திறமை, ஆளுமை, குணம், பண்புகள்,அத்தோடு அவள் வாய்க்கு வாய் எங்க வீட்டுக்கார்ர் சொல்வார் என்று கூறுவாள். அவர் சொன்னதாகச் சொல்லும் நல்ல கருத்துக்கள் என்று சகல விதத்திலும் அவளைக் கவர்ந்திருந்தாள்.

இவள்தான் வசுவா? அவளும் ஆனந்தத்தில் திணறிப் போனாள்.

ஹரிணி பரபரப்போடு சுக்கானை அழைத்து வர ஓடினாள்.

சுக்கானை நினைக்கையில் அவள் மனம் நெகிழ்ந்தது.

பாசம், பிரியம், அன்பு மட்டுமே காட்ட்த் தெரிந்த வெகுளியான மனுஷன். அந்தக் குடும்பத்தின் நன்மையைத் தவிர வேறு எதுவும் செய்யத் தெரியாதவன். மனசு நிறைய பாசத்தைக் கொடு. வயிறு நிறைய அன்பைக் கொடு என்பது அவன் கொள்கை.

வசு கர்ப்பமாக இருந்த போது தாயை விட மேலாக அவளைத் தாங்கிப் பிடித்தவன்.வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, பத்தியச் சமையல் செய்து, அவள் காலைப் பிடித்து விட்டு,வாந்தி எடுத்தால் சுத்தம் செய்து, தலைக்கு குளிக்க எண்ணெய் காய்ச்சித் தருவான்.

மாமியார்தான் அவளுக்கு தலை தேய்த்து குளித்து விடுவாள்.சுக்காந்தான் தலைக்கு சாம்பிராணி போடுவான்.

“ஏன் இப்படி எல்லாம் செய்யறே சுக்கா?” சங்கோஜமாக இருக்கும் வசுவுக்கு.

“ஏன் ?இதுல உனக்கென்ன கஷ்டம்? நீ என் குலதெய்வம் கண்ணு?”என்பவன் அவளை சாமியாத்தான் நினைத்தான்.வெள்ளி, செவ்வாய்களில் அவளுக்கு பூ வாங்கித் தருவான்.பிறந்த நாள்,கல்யாண நாளுக்கு இருவருக்கும் அவன்தான் துணிகள் வாங்கித் தருவான். வசுவுக்கு பாசிகள் மீது விருப்பம்.குறத்தி மாதிரி என்பார் சாய் நாதன். சுக்கான் தேடிப் பிடித்து அவளுக்குப் பிடித்த மாதிரி பாசிகள் வாங்கி வருவாண்.

“எஞ்சாமிக்கு அம்புட்டு அழகா இருக்கு. நீ ஏன் வேனாங்கறே”என்பான்.

அவன் மனசைப் புரிந்து கொண்டதால் அவனை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.அடிக்கடி சாய் பாடுவார்.

எங்கிருந்தோ வந்தான். இடைச் சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்”

உண்மையில் தவம்தான். தேடினாலும் சுக்கான் மாதிரி கிடைக்க மாட்டான் என்பார்கள் உறவுகள், நட்பு வட்டத்தில்.கடவுள் அனுப்பிய தூதன் அவன்.

அவள் கண்களை மூடி படபடக்கும் இதயத்தோடு காத்திருந்தாள்.

சுக்கான் பரபரவென்று ஓடி வந்தான்.

வசுவைப் பார்த்ததும் அவனிடம்தோன்றிய உணர்வை எப்படிச் சொல்ல முடியும். தெய்வத்தைக் கண்ட பரவசத்தில் மெய் சிலிர்க்க நின்றான். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வசும்மா, வந்துட்டியா?” என்று குழறினான்.

அப்படியே தடாலென்று அவள் காலில் விழுந்தான்.

“என் குலதெய்வமே. இந்தக் குடும்பத்தைக் காப்பாத்து”

நீட்டி விழுந்தவன் அப்படியே விக்கி, விக்கி அழ ஆரம்பித்தான்,

வசுவும் அழ ஆரம்பிக்க,ஹரிணி நெகிழ்ந்து போய் நின்றாள்.

< பகுதி – 8 பகுதி – 10 >

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930