தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பிரசாரம்

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று (04.04.2026, சனிக்கிழமை) புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் கழகத் தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, கழகத் தலைவரின் பிரசாரத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லை.

அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!