தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

திருவாரூரில் ஏப்ரல் 2 ஆம் தேதி பரப்புரை பயணத்தை தொடங்கும் முதலமைச்சர், ஏப்ரல் 21 ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்ய உள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வரும் 2 ஆம் தேதி தொடங்க உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது என்று இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இதற்காக 20 க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பட்டியல் இன்றைக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஓரிரு நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

அதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் முதலமைச்சர் சென்று சூறாவளி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதன்படி, திருவாரூரில் ஏப்ரல் 2 ஆம் தேதி பரப்புரை பயணத்தை தொடங்கும் முதலமைச்சர், ஏப்ரல் 21 ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக ஏப்ரல் 6 ஆம் தேதி காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!