தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து சேவை

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்த தேர்​தல் விழிப்​புணர்வு கண்​காட்சி பேருந்து சேவையை மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் நேற்று தொடங்​கி​ வைத்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்​து, வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், “தேர்​தல் திரு​விழா – தமிழ்​நாட்​டின் பெரு​விழா” எனும் தேர்​தல் விழிப்​புணர்வு கண்​காட்​சிப் பேருந்து மற்​றும் வாக​னங்​கள் சேவை தொடக்க விழா ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சென்னை மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் பங்​கேற்று விழிப்​புணர்வு வாகன சேவையை கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.

இந்த பேருந்து சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 தொகு​தி​களி​லும் பொது​மக்​கள் அதி​கம் கூடுமிடங்​களில் நிறுத்​தப்​பட்​டு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!