சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
