ரஷ்யாவில் இருந்து 7 கப்பல்களில் கச்சா எண்ணெய் வருகிறது

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்​பல் நேற்று கர்​நாட​கா​வின் மங்​களூருக்கு வந்து சேர்ந்​தது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போரால் இந்​தி​யா​வில் சமையல் காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அதன் பிறகு ஈரான் ராணுவத்​தின் சிறப்பு அனு​ம​தி​யுடன் ஷிவாலிக் கப்​பல், நந்தா தேவி கப்​பல், ஜக் லட்கி கப்​பல்களில் கச்சா எண்ணெய் இந்தியா வந்​தடைந்​தன.

இதற்கிடையில் வளை​குடா நாடு​களின் கச்சா எண்​ணெய், சமையல் காஸ் (எல்​பிஜி) போக்​கு​வரத்து முடங்​கிய​தால் அமெரிக்க நிறு​வனங்​களிடம் இருந்து 22 லட்​சம் டன் எல்​பிஜியை கொள்​முதல் செய்ய இந்​திய பொதுத்​துறை நிறு​வனங்​கள் ஒப்​பந்​தங்​களை மேற்​கொண்டு உள்​ளன.

இதன்​படி அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த பைக்​ஸிஸ் பயோனீர் கப்பல் நேற்று கர்​நாட​கா​வின் மங்​களூரை வந்தடைந்தது. மங்களூருவில் கச்சா எண்​ணெய் மற்​றும் எல்​பிஜி சேமிப்பு கிடங்கு​கள் உள்​ளன.

அங்​கிருந்து கர்​நாட​கா, தமிழகம், தெலங்கானா, ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​களுக்கு பெட்​ரோல், டீசல், எல்​பிஜி காஸ் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

மங்​களூரு துறை​முகத்​துக்கு அடுத்​தடுத்து சமையல் காஸ் கப்​பல்​கள் வருவதால் தென் ​மாநிலங்​களில் எல்​பிஜி விநி​யோகம் அதிகரிக்கும் என்று பொதுத்​துறை எண்​ணெய் நிறுவன அதிகாரிகள் தெரி​வித்​துள்​ளனர்.

இதற்கிடையில் சீனா​வுக்கு சென்று கொண்​டிருந்த ரஷ்​யா​வின் 7 கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் இந்​தி​யா​வுக்கு திருப்பி விடப்பட்டிருக்​கின்றன. இதில் அகுவா டைட்​டன் என்ற கப்​பல் சுமார் ஒரு லட்​சம் டன் கச்சா எண்​ணெ​யுடன் நேற்று முன்​தினம் மங்​களூரு துறை​முகத்தை வந்​தடைந்​தது. ரஷ்​யா​வின் 6 கச்சா எண்​ணெய் கப்​பல்​களும் அடுத்​தடுத்து இந்​திய துறை​முகங்​களை வந்து சேரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!