இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 31)

இன்னிக்கு ஹாலோவீன் டே… ஐரோப்பா நாடுகளில் இந்த இந்த ஹாலோவீன் கொண்டாடும் பழக்கம் துவங்கியது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொண்டாட்டம் தொடங்கிச்சு. ஐரோப்பா நாடுகளில் இந்த தினம் தான் அறுவடை நாளாகவும் அதே நேரத்தில் வெயில் காலம் முடிந்து குளிர்காலம் துவங்கும் நாளாகும் இருப்பதால் இன்றைய தினத்தை இவ்வாறு கொண்டாடுகிறார்கள். அகால மரணத்தைத் தழுவியவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் தங்களுக்கு நெருக்கமானவர்களைச் சுற்றியே திரியும் என்கிற நம்பிக்கை வெளிநாடுகளிலும் உண்டு. இந்த நம்பிக்கையின் பின்னணியில் உருவானதுதான் ஹாலோவீன் நாள் என்றும் சொல்வர். நம்மூரில் மயானக் கொள்ளை திருவிழாவில் காளி வேடம் தரித்தவர்கள், ஆக்ரோஷமான உடல்மொழியை வெளிப்படுத்தி அச்ச உணர்வை ஏற்படுத்துவார்கள் அல்லவா? இதே திகல் அனுபவத்துடன் கொஞ்சம் கேளிக்கையையும் கலந்து கொடுப்பதுதான் ஹாலோவீன். முதலில் இதை சர்ச்களில் சிறப்புப் பிரார்த்தனை நாளாக மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆனால் நாளடைவில் இது வணிகமாகவும், பார்ட்டி கொண்டாடும் நாளாகவும் மாறிவிட்டது. இந்த நாளில் வித்தியாசமாகப் பேய் போலவும் வித்தியாசமான உருவங்கள் போலவும் உடையணிந்து அவர்கள் பூசனிக்காயை விதவிதமாக கட் செய்து டிசைன் செய்து வீதிகளில் சென்று நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவர். ஹாலோவீன் நாள் அன்று மட்டும் தான் இவ்வாறான உடையணிந்து ரோட்டில் செல்ல அனுமதியுண்டு.

செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் நினைவு நாளின்று தஞ்சாவூர் டிஸ்ட்ரில் செம்மங்குடி அருகே திருக்கொடிக்காவல் கிராமத்தில் ரொம்பப் பிரபலமான இசைக் குடும்பத்தில் பிறந்த சீனிவாச ஐயர், கர்நாடக இசையுலகின் பீஷ்ம பிதாமகனாகக் கருதப்பட்டவர். 1948ம் ஆண்டில் மியூசிக் அகாடெமியின் சங்கீத கலாநிதி பட்டத்தைப் பெற்றார். இளம் வயசிலே அந்தப் பட்டம் பெற்ற முதல் நபர் செம்மங்குடி தான். மத்திய அரசின் பத்மபூஷன் உள்பட நாட்டின் மிக உயரிய இசைவிருதுகளைப் பெற்றவர். மறைந்த திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் எழுதிய கீர்த்தனைகளுக்கு இசை வடிவம் தந்தவர் சீனிவாசஐயர் தான். திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான கலைஞராக இருந்தவர். திருப்பதி கோவிலின் ஆஸ்தான கலைஞராகவும் இருந்த செம்மங்குடி. சங்கீத கலாபூஷன் உள்ளிட்ட பல்வேறுவிருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை இசைக் கல்லூரியின் முதல்வர், திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வர்,சென்னை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். தென்இந்தியாவின் இசை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர். தனது மாமாவான வயலின் இசைத் கலைஞர் கிருஷ்ண ஐயரிடமும், தனது உறவினரான நாராயணசாமி ஐயரிடமும்8 வயதிலேயே இசை பயில ஆரம்பித்தார். பின்னர் கும்பகோணத்தில் கொட்டுவடம் சகராம ராவின் குருகுலத்தில்இசை பயின்றார். அவர் தான் செம்மங்குடியை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடம் அறிமுகப்படுத்தி வைத்து இசைகற்க வைத்தார். ராகங்களைக் கையாள்வதில் விற்பன்னராகத் திகழ்ந்த சீனிவாச ஐயர் இசையில் கலப்படத்தை அறவே வெறுத்தவர். இளையராஜாவின் கர்நாடக இசை ஞானத்தை வெகுவாக பாராட்டி வந்தவர். அதே நேரத்தில் பாலமுரளிகிருஷ்ணாவின் இசையை கடுமையாக விமர்சித்தும் வந்தார். தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், தமிழக அரசின் கலைமாமணி, மத்திய பிரதேச அரசின் காளிதாஸ்சம்மான் ஆகிய விருதுகளையும் பெற்றவர் இதே அக்டோபர் 31-ல்தான் காலமானார்.

எம்.எல்.வசந்தகுமாரி நினைவு நாளின்று, இந்தப் பெயர் கர்நாடக இசையுலகில் மட்டுமல்ல, தமிழ் திரையிசை உலகிலும் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். எம்.எல்.வசந்தகுமாரி என்பதன் விரிவு மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்பதாகும். இவர் 1928 ஜூலை 3ஆம் தேதி பிறந்தவர். எம்.எல்.வியின் தாய் லலிதாங்கி என்பதைப் பார்த்தோம், தந்தையார் ஐயாசாமி ஐயர். எம்.எல்.வியின் பள்ளிக் கல்வி சென்னை நகரத்தில்தான். இசைக் கல்வி ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம். புரந்தரதாசர் பற்றி இசை அறிந்தோருக்கு எல்லாம் நன்கு தெரியும். அவருடைய கன்னட மொழி பாடல்களை தமிழ் நாட்டில் பிரபலப்படுத்தியவர் எம்.எல்.வி. இவர் தன்னுடைய தாயாருடன் வட இந்தியாவுக்குச் சென்றிருந்த சமயம் அவரோடு சேர்ந்து இவரும் பாடியிருக்கிறார். அப்பொது அவருக்கு வயது 12. இவர் தனிக் கச்சேரி செய்தது பெங்களூரில். 1950க்குப் பின்னர் வந்த காலகட்டத்தில் இவருடைய இசை கேட்காத இடமில்லை, நாளில்லை என்று ஆயிற்று. இவர் இசையால் வசப்படுத்திய உள்ளங்கள் ஏராளம். குரலில் ஒரு தனித் தன்மை, மணமகள் படம் இவர் பாடலை உலகறியச் செய்தது. கர்நாடக இசையுலகில் இவர் எத்தனை பிரபலமோ, அதே அளவுக்கு திரையுலகிலும் இவர் பிரபல பாடகியாக விளங்கினார். 1951இல் வெளிவந்த “மணமகள்” படத்தில் இவர் பாடிய “எல்லாம் இன்ப மயம்” எனும் பாடல் இன்றுவரை சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. மகா கவி சுப்ரமணிய பாரதியார் “சின்னஞ்சிறு கிளியே” என்ற பாடலை இயற்றியதோடு அதற்கு ராகத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தப் பாட்டை திரைப்படத்துக்காக இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் அவர்கள் அமைத்த இசையில் எம்.எல்.வி. பாடிய பாடல்தான் இன்றும் பிரபலமாகியிருக்கிறது. “கொஞ்சும் புறாவே” என்றொரு பாடல், இவர் குரலில் கொஞ்சியது. இப்படி இவர் பாடிய பாடல்கள் எல்லாம் காலத்தால் மறக்க முடியாத பாடல்களாகவே அமைந்தன. காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள் நடத்தச் சொன்னதும், எல்லா ஊர்களிலும் அத்தகைய மாநாடுகள் நடந்தன. அதற்காக அவர் பாடிய திருப்பாவை பாடல்கள் ஒலித்தட்டுகளாக வந்து மக்கள் மனங்களைக் கவர்ந்தன. இசைக் கச்சேரிக்கு எம்.எல்.வி. வந்து மேடையில் அமர்ந்தவுடனேயே அங்கு ஒரு கம்பீரம் தோற்றமளிக்கும். அவர் பாடத் தொடங்கிய பின்னர் முடிக்கும் வரை மக்கள் உள்ளங்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும். விகடம் கிருஷ்ணமூர்த்தி மேடைகளில் ‘விகடக் கச்சேரி’ செய்வார். பெரும்பாலும் ராஜாஜி, கல்கி ஆகியோர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் மேடையேறி விகடம் செய்வார். அதில் ராஜாஜியை வைத்துக் கொண்டே அவரைப் போலவே கையில் கைத்தடி, முகபாவம் எல்லாம் காட்டி அவையை கலகலப்பாக்குவார். 1951இல் எம்.எல்.வி. இந்த விகடம் கிருஷ்ணமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார், ராஜாஜியின் ஆசியுடன். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகள்தான் பிரபல நடிகை ஸ்ரீவித்யா. எம்.எல்.வி. புரந்தரதாசரின் படைப்புகளை வைத்து மைசூர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இளம் வயதில் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருதினையும் பெற்றார். 1948 தொடங்கி 1965 வரையிலான காலகட்டத்தில் இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடியுள்ளார். இத்தனை புகழையும் ஏற்றுக்கொண்டு இசையுலகின் சக்கரவர்த்தினியாக வாழ்ந்த எம்.எல்.வசந்தகுமாரி 1990ஆம் வருஷம் இதே நாள் தன்னுடைய 63ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

தமிழின் முதல் பேசும் சினிமா வெளியான நாள் (1931) பேசும் சினிமா வருவதற்கு முன்னால் ஊமைப்படங்களைத்தான் மக்கள் பார்த்தாய்ங்க. தமிழின் முதல் பேசும் சினிமாவின் பெயர் காளிதாஸ். தென்னிந்தியாவின் முதல் பேசும் சினிமாவும் அதுதான். இதே நாளில்தான் அது வெளியானது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி காளிதாஸ்.அவர் சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றி உள்ளார்.அவரைப் பற்றிய சினிமா இது. தமிழ்ப்படம் என சொல்லப்பட்டாலும் அதில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பேசியிருன்தாங்கர். இதில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடிச்சிருந்தாய்ங்க. இதில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. “இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை” போன்ற தேசபக்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இருந்தார்.அவர்தான் முதல் சினிமா பாடலாசிரியர். இதன் முதல் காட்சி சென்னையில் இருந்த ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது. கான் பகதூர் அர்தேசிர் இரானி எனும் புகழ்பெற்ற இயக்குநரின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனியின் மூலம் இந்த படம் தயாரிக்கப்பட்டது. அவரின் உதவியாளரான எச். எம். ரெட்டி படத்தை இயக்கினார். எட்டாயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் 75 ஆயிரம் வரை வசூல் செஞ்சுது. 1931 முதல் 40 வரை எடுத்த படங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன.அவற்றில் காளிதாஸ் படமும் ஒன்று.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமின்று: இந்தியா விடுதலை அடைந்தவுடன், நாட்டிலிருந்த அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நிலப்பரப்பாக இந்தியாவை வடிவமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஆயுதப்படைகளைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அவரது உறுதியான தலைமை காரணமாகவே அனைத்து சமஸ்தான அரசுகளும் இயல்பான ஒத்துணர்வுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. . குஜராத்தின் கேடா மாவட்டத்தில், கரம்சத் கிராமத்தில் 1875, அக்டோபர் 31ல் பிறந்த வல்லபபாய், லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்று வந்தார். கோத்ரா, மும்பை, அகமதாபாத் நகர்களில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், 1917 ல் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். மகாத்மா காந்தியின் போராட்ட வழிமுறைகளாலும் போதனைகளாலும் கவரப்பட்ட அவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்கள், கட்சி மாநாடுகளில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக விளங்கிய படேல், 1934 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க இயலாத தலைவராக உயர்ந்தார். . விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோருக்கு அடுத்தபடியாக பெரும்பங்கு ஆற்றியவர் படேல். காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பும் படேலை நாடி வந்தது. எனினும் கட்டுப்பாடுள்ள கட்சித் தொண்டனாக, காந்தியின் அறிவுரையை ஏற்று அமைதி காத்தார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த படேல், தேசப்பிரிவினை உள்ளிட்ட நெருக்கடியான காலத்தில் நாட்டை உறுதியாக வழிநடத்தினார். 1950, டிசம்பர் 15ல் உடல்நலக் குறைவால் படேல் மும்பையில் காலமானார். . இந்தியா என்ற அரசியல் ஒருங்கிணைப்புக்கு சர்தார் வல்லபபாய் படேல் அளித்த பங்களிப்பு மகத்தானது. சர்வமத சமரசம் என்பது எந்த மதமும் சாராததோ, இந்து மதத்தை நிராகரிப்பதோ அல்ல என்று அவர் தெளிவு படுத்தினார். அதனாலேயே கஜினி முகமதுவால் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் கோயிலை தானே முன்னின்று மீண்டும் கட்டினார் படேல். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே சுக்கானாக இருந்து முறைப்படுத்திய ஆளுமைக்கு உரியவர் படேல்.

`இசை தாதாஎஸ்.டி.பர்மனின் நினைவு நாளின்று இந்தி சினிமா பாட்டு மேலே தமிழர்களுக்கு வெறி பிடிக்க வெச்சது இவர்தான்.. இந்த இசைக்கடவுள் இந்தித் திரையுலகில் முப்பதாண்டு காலம் துவம்சம் செய்தவர். நம்ம ஊர் எம்எஸ்வியைபோல நடிக்க ஆசைப்பட்டு வந்து இசையமைப்பாளரா மாறியவர்.இப்பவும் நார்த் இண்டியாவுக்கு பயணம் மேற்கொண்டால் எங்கேனும் சாலையோர தேநீர் விடுதிகளிலோ, வயற்காட்டின் நடுவே இருக்கும் மண் குடிசைகளிலோ ரேடியோக்களிலிருந்து இவர் இசையமைத்த பாடல்கள் காற்றில் கரைந்த வண்ணம் இருக்கும். கோடம்பாக்க சினிமாவில் இளையராஜாவின் வருகைக்கு முன், எம்.எஸ்.விஸ்வநாதன் இங்கு தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தச்சே, எஸ்.டி பர்மனும் நௌஸாத்தும் எல்லை தாண்டிய மியூஸிக்கல் வார் ஒன்றை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்தாய்ங்க. ஆம்… தமிழ்நாட்டில் ஒவ்வொரு டீக்கடையிலும், பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல் இடம் பெற்ற படம் ‘ஆராதனா’. (இதுபற்றி இளையராஜாவே ஒரு பேட்டியில் சிலாக்கியமா சொல்லியிக்காறார்) ராஜேஷ் கன்னா- ஷர்மிளா தாகூர் நடிப்பில் 1969-ல் வெளியான இப்படம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிச்சு. தென்னிந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டி பரபரப்பாகப் பேசப்பட்டுச்சு. தன் இந்தி இசையால் வெற்றித் தடம் பதித்த முதல் வடஇந்திய இசையமைப்பாளர் என சச்சின் தாதாவைத் தாராளமாகச் சொல்லலாம். தாதா என்பது பாலிவுட் செல்லமாக வைத்த பட்டப்பெயர். நிஜப்பெயர் சச்சின் தேவ் பர்மன்… சுருக்கமாக எஸ்.டி.பர்மன்! வயது வித்தியாசமின்றி இப்போதும் பலரின் ப்ளே லிஸ்ட்டில் தாதாவின் பாடல்கள் இருப்பதால், `ஸ்பாட்டிஃபை’, `ஜியோ சாவன்’, `கூகுள் மியூஸிக்’ போன்ற இசைக்கென உள்ள பிரத்யேக தளங்களில் இவரின் இசை அதிகம் பேரால் கேட்கப்பட்டு, ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. அதுதான் தாதாவின் வெற்றி! ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோ’ அப்படீங்கற சினிமா நிறுவன அதிபர் சஷாதர் முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டார் அசோக் குமாரின் இரண்டு படங்களுக்கு 1944-ல் இசையமைச்சார். புதுமையான இசையமைப்பு பாணி பலரை வியப்பில் ஆழ்த்திபுடுச்சு. 1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் ஹிட் சினிமாவான ‘தோ பாய்’ படத்தின் இசையமைப்பாளராக வரலாற்று வெற்றியைப் பெற்றார். அந்தப் படத்தின் 9 பாடல்களும் அந்நாள்களில் `இந்திய சினிமாவின் புதிய இசை’ எனக் கொண்டாடப்பட்டுச்சு. அதிலும் முதல் மூன்று படங்கள் தாதாவுக்குப் பல்வேறு விருதுகளைப் பெற்று தந்துச்சு. தாதாவின் மானசீக குருவான நௌஷாத் இசையமைப்பில் பாடிக்கொண்டிருந்த லதா மங்கேஷ்கரைப் பல இசையமைப்பாளர்கள் ‘குரல் மென்மையாக இருக்கிறது’ என புறக்கணிச்சபோது, தொடர்ந்து தன் படங்களில் அம்புட்டுப் பாடல்களையும் பாட வைச்சு எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தார் பர்மன். கிஷோர் குமார் – முகமது ரஃபி – லதா மங்கேஷ்கர் – ஹேமந்த் குமார் என்ற நால்வர் கூட்டணியை வைத்து பாட்டுலகில் பெரும் ராஜ பாட்டையை நிகழ்த்திக் காட்டினார் தாதா. ஹார்மோனியப் பெட்டியோ வேறு எந்த வாத்தியக் கருவிகளோ இல்லாமல் கைகளைத் தட்டி அவர் டியூன் போட்ட முறை திரையுலகில் இருந்தவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ‘இதெல்லாம் சில பட அதிசயம்… மிஞ்சிப்போனால் இன்னும் ரெண்டு படங்கள் தாங்குவார்!’ எனப் பலர் விமர்சனம் என்ற பெயரில் குத்திக் கிழிச்சாய்ங்க. ஆனால், இன்னும் பல ஹிட் பாடல்களை தன் வெற்றிக் கணக்கில் சேர்த்துக் கொண்டே போய் அதற்குப் பதிலடி கொடுத்தார் இந்த இசை தாதா! அவரது படைப்பூக்கத்தின் உச்சம் என்று 1957-ல் ரிலீசான குரு தத்தின் ‘பியாஸா’ படத்தை சொல்லலாம். முகமது ரஃபியின் குரலில், ‘ஹம் ஆப்கே ஆங்கோன்’, ‘யே துனியா அகர்’, ‘ஜானே வோ கெய்ஸே’ உள்ளிட்ட எல்லா ஸாங்கு மிகப்பெரிய ஹிட்டாகின. சொல்லப் போனால், குரு தத்தின் மிகச் சிறந்த இயக்கத்திலும் நடிப்பிலும் வந்த பியாஸா வெறித்தனமான உழைப்புக்கும், மிகச் சிறந்த கலைக்கும் இன்று வரை இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு அந்தப் படத்தின் இசையும் ஒரு காரணம்தான். குரு தத்துக்கு மிகப்பெரிய மரியாதையைப் படத்தின் இசையால் எஸ்.டி.பர்மன் கொடுத்திருந்தார் என்பதே நிதர்சனம்! தேவ் ஆனந்தின் ‘கைடு’, ‘பம்பாய் கா பாபு’, ‘தேரே கர் கே சாம்னே’,’ `ஜூவல் தீஃப்’ போன்ற படங்கள் எல்லாம் எஸ்.டி.பர்மனின் இசைக்காகவே கொண்டாடப்பட்ட படங்கள். இவ்வளவுக்கும் 60களில் கடுமையான ஆஸ்துமா பிரச்னையில் அவதிப்பட்டாலும்கூட பிஸியாக ரெக்கார்டிங்குகளில் நாள்களைக் கழித்தார் தாதா. குடும்பத்தினர் இவரை உரிமையோடு கோபித்தாலும் கூட இவரின் இசைத் தாகம் தணியவில்லை. “உடல்நிலை சரியில்லை என்றால் நாம் ஓய்வெடுப்போம். ஆனால், தாதா ரெக்கார்டிங்கில் மூழ்கிக் கிடப்பார்! அவரது வலி நிவாரணி இசைதான்!” அப்படீன்னு முன்பு ஒருமுறை பாடகர் கிஷோர் குமார் தாதா பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு இசையைத் தவிர வேறு ஒன்றை அறியாதவராய் இருந்தார் தாதா. அந்த அறியாமை அவரே தனக்குத்தானே இட்டுக்கொண்ட கவசம் எனலாம். “ரெக்கார்டிங் இல்லாத பொழுதுகளை அவர் விரும்புவதில்லை” என்கிறார் அவரை நன்கு புரிந்து வைத்திருந்த மனைவி மீரா தாஸ் குப்தா. கணவரின் பெங்காளி படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் இவர்! பேயிங் கெஸ்ட், பியாசா, சல்டினாம் காடி, காலாபாணி, தேரேகர்கே சாம்னே, பாந்தினி, கைடு. ஜுவல்தீஃப், ஒட்டு மொத்த இந்தியாவையும் பாட்டு பைத்தியம் பிடிக்க வைத்தஆராதனா..அபிமான், சுப்கே சுப்கே.. அட போங்கப்பா அது பெரிய லிஸ்ட்…1975ல் இறக்கும்வரை இந்தித் திரையுலகை ஆட்டிப்படைத்தவர்.. இசை.இசை.இசை என ரத்ததிலேயே ஊறிப்போனதாலே என்னமோ இவருக்கும் பிறந்ததும் இன்னொரு இசை மேதையாகி இந்தி திரையுலகையே இளமை துள்ளலோடு எகிறவைத்தது. அந்த பிள்ளை, வேற யாரு ஆர்.டி.பர்மன்தான்.. இந்த பதிவை படித்தால் எதுவுமே புரியாதவர்கள், அவரின் பாடல்களை தேடிப்பிடித்து கேட்டுப்பாருங்கள். இப்படி இசையாகவே வாழ்ந்த தாதா மரணத் தறுவாயிலும்கூட ரெக்கார்டிங் அறையில் பிஸியாக இசையமைக்கும் பணியில் மூழ்கிக் கிடந்தார். தன் இசையில் அதிக பாடல்களைப் பாடிய கிஷோர் குமாரை ‘மை சன்’ என்று அன்போடு அழைக்கும் அளவுக்குப் பாசத்தோடு இருந்தார். அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான `மிலி’ படத்தில் இடம்பெற்ற ‘படி ஸூனி ஸூனி ஹே!’ பாடல்தான் அவர் கடைசியாக இசையமைத்தது. அந்தப் பாடல் ஒலிப்பதிவின் போதுதான் மயக்கமாகி கோமாவுக்குப் போயிருக்கிறார். மருத்துவமனையில் சில நாள்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் 1975 அக்டோபர் 31-ம் தேதி பிரிஞ்சுது. எஸ்.டி.பர்மன், மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 50 ஆண்டுகள். ஆனதை ஆந்தை குழுமம் நினைத்து அஞ்சலி செலுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!