இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 19)

உலகப் புகைப்பட தினம்! 1839 ஆக.19ல்தான் உலகில் முதன் முதலாக புகைப்படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 185 வயசாகுதுன்னு சொல்லலாம். புகைப்படம் என்பது ஒரு “படம்’ அல்ல. அது ஒரு “கலை’. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம் என்பது பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. எல்லாஇடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல் பிரான்ஸ் அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “ப்ரீ டூ தி வேர்ல்டு’ என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில்தான் ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுது.

உலக மனித நேய தினம்… மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும்… பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட… என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே ‘உலக மனித நேய தினம்’. 2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ, �`உலக மனித நேய தினமாக�’ அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது. 2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உரோமானியக் கடவுளான வீனசுக்கு முதல் உரோமைக் கோயில் கட்டப்பட்டது. வீனஸ் என்பவர் ரோமானிய தொன்மவியலில் அன்பு, அழகு, கருவுறுதல், மற்றும் வெற்றி ஆகியவற்றுக்கான கடவுள். இவர் கிரேக்க கடவுளான அப்ரோடைட்டுக்கு (Aphrodite) இணையானவர். கோவில் கட்டப்பட்டதற்கான காரணம்: போரில் வெற்றி பெற்றதற்காக, ரோமானியர்கள் இந்த கோவிலை வீனசுக்கு அர்ப்பணித்தனர். முக்கியத்துவம்: வீனஸ் வழிபாடு ரோமானிய சாம்ராஜ்யத்தில் மிகவும் பரவலாக இருந்தது. அவர் ரோமானிய மக்களின் முன்னோராகக் கருதப்பட்டார். குறிப்பாக, ஜூலியஸ் சீசர் (Julius Caesar) தன்னை வீனஸ் குலத்தைச் சேர்ந்தவராகக் கூறிக்கொண்டார். கலை மற்றும் இலக்கியம்: வீனஸ் பல்வேறு ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கவிதைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் காலமான தினம் ஆன்ட்ரே பல்லாடியோ (Andrea Palladio) காலம்: நவம்பர் 30, 1508 – ஆகஸ்ட் 19, 1580. பங்களிப்பு: மறுமலர்ச்சி காலத்தின் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். குறிப்பாக, அவரது கட்டிடக்கலை பாணி “பல்லாடியன்” (Palladian) என அழைக்கப்படுகிறது. சிறப்பம்சம்: பண்டைய ரோமானிய மற்றும் கிரேக்க கட்டிடக்கலை கூறுகளைப் பயன்படுத்தி, சமச்சீர் (symmetry), விகிதாச்சாரம் (proportions) மற்றும் ஒழுங்கு ஆகியவற்றுடன் தனது வடிவமைப்புகளை உருவாக்கினார். அவரது படைப்புகள் உலகம் முழுவதும் பல கட்டிடக்கலைஞர்களுக்கு உத்வேகம் அளித்தன. முக்கியப் படைப்புகள்: வில்லா ரோட்டோண்டா (Villa Rotonda) பசிலிக்கா பல்லாடியானா (Basilica Palladiana) தியாட்ரோ ஒலிம்பிகோ (Teatro Olimpico) அவரது வடிவமைப்புகள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் நியோகிளாசிக்கல் (Neoclassical) கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தன.

சுவாமி சாரதானந்தரின் நினைவு நாள் 1927. சுவாமி சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதர துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சரத் சந்திர சக்கரவர்த்தி.இவரது பெற்றோர் கிரிஷ் சந்திர சக்கரவர்த்தி, நீலமணி தேவி.சசியும் சரத்தும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். பிரம்ம சமாஜத்தின் கேசவ சந்திர சேன் எழுதிய கட்டுரை மூலம் கேள்விப்பட்டு இவர்களது பொதுவான நண்பர் காளி பிரசாத் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்க விரும்ப, அவருடன் சசியும் சரத்தும் இணைந்து சென்று ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுவாமி விவேகானந்தர் இவரை சேவை செய்யத் தேர்ந்தெடுத்தார். அன்னை சாரதா தேவியின் சேவைகளை அவரது சமாளிக்கச் சிரமமான உறவினர்கள் மத்தியில் திறம்படச் செய்தவர். இவர் தமது குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை, இளமைப்பருவத்தில் அவருடன் வாழ்ந்த பலரிடமிருந்தும் தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

முனைவர் டாக்டர் பெரியார்தாசன் நினைவு நாள் 2013 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்..பெரியார் தாசனாக அவர் வலம் வந்தபோது தீவிர நாத்திகனாக திகழ்ந்தார். மூடத்தனம், அறியாமை உள்ளிட்டவற்றுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தார். பகுத்தறிவை வளர்க்கப் பாடுபட்டவர். ஆனால் 2010ம் ஆண்டு அவர் திடீரென இஸ்லாம் மதத்தைத் தழுவினார். இதுகுறித்து அவர் விளக்கம் தருகையில், மதம் ஒன்றுதான் மனித உள்ஙங்களை உலகத்துடன் இணைக்கும் ஒரே வழி என்பதை உணர்ந்ததால்தான் இஸ்லாமுக்கு மாறினேன். இஸ்லாம் மட்டுமே கடவுளால் அளிக்கப்பட்ட நூலை முறையாக பின்பற்றுகிறது என்று கூறியிருந்தார். பெண் சிசுக் கொலைக்கு எதிரான கருத்தம்மா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார் பெரியார்தாசன். மேலும் சில படங்களிலும் பெரியார்தாசன் நடித்துள்ளார்.பெரியார் தாசன் தனது கண்கள் மற்றும் உடலைத் தானமாக தருவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.. அதேபோல அவரது உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்பட்டது. கண்கள் சங்கர் நேத்ராலயாவுக்கு அளிக்கப்பட்டன.

தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள். சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன. சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936-ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராகப் பணியாற்றினார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்தர எழுச்சியை ஊட்டினார். சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார். 1942-ல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ‘சத்தியமூர்த்தி பவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்டவர் சத்தியமூர்த்தி.

தமிழகத்தின் 2-வது பெரிய அணை யான பவானிசாகர் அணை கட்டப் படுவதற்கு காரணமாக இருந்த கீழ் பவானி அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி பாய்ந்து வரும் பவானி ஆறு மற்றும் மோயாறு நதிகள் கலக்குமிடத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலம் கிராமத் தின் அருகே ரூ.10.50 கோடி செலவில் 1948-ல் தொடங்கி 1955 ஆக. 19-ல் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது. முதலமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணை, 120 அடி உயரம் கொண்டது. இதில், 32.8 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!