இன்று ஆகஸ்ட் 16 புதுச்சேரி மாநில குடியரசு தினம் 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் புதுச்சேரி மாநிலம் மட்டும் ஃபிரான்ஸ் நாட்டின் வசம் இருந்தது. இந்தியா – ஃபிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் 1956இல் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பெற்றது. அதன் விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது (Union Territory) . புதுவை மாநிலம் என்பது புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்கள் அவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு நாளின்று இராமகிருஷ்ணர் தெரியாதவர்கள் மிகக் குறைவே என்று சொல்லலாம். பல இடங்களில் உற்பத்தியான ஆறுகள் ஒரே கடலில் வந்து சேருவது போல, சமய மார்க்கங்கள் அனைத்தும் ஒரே இறைவனை அடையும் வழிகள் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் கடைப்பிடிக்க வழிகாட்டிய மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். எந்த சமய ஆன்மிகக் கருத்துக்களையும் குறை சொல்லாமலும், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமலும், எல்லா சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். மகான் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. மிக கடினமான வேத, உபநிஷத்து கருத்துக்களை கூட அனைவருக்கும் புரியும் வண்ணம் சிறிய கதைகள் மூலம் சொன்னவர். சுவாமி விவேகானந்தர் சீடரானார்: பரமஹம்சர் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இவர்களுள் நரேந்திரன் குறிப்பிடத்தக்கவர். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. பரமஹம்சரின் முக்கிய புகழ்பெற்ற சீடராக அவர் விளங்கினார். இந்த நரேந்திரன்தான் பின்னாளில், ஒரு மகானாக, விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சமாதிக்கு பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடங்கள், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆனது எப்படி: விவேகானந்தரின் கேள்விகளும், சிறப்பான வாதங்களும் பரமஹம்சருக்கு மிகவும் பிடித்திருந்தன. இதனால் பரமஹம்சருக்கு மற்ற சீடர்களை விட, இளம் வயதுச் சீடரான விவேகானந்தர் மீது மிகுந்த பற்று இருந்தது. விவேகானந்தர் ஒரு முறை ராமன், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் குறித்த தகவலைக் கேட்டுக் கொண்டிருந்த போது பரமஹம்சர், “ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவர் எவரோ, அவரே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!” என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகான் ஆனார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அமுத மொழிகள் புத்தகம் ஆனது: மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசங்களைக் கேட்க வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர் தன்னைத் தேடி வருபவர்களுக்கு உபதேசம் செய்வதுடன், மற்ற நேரங்களில் சீடர்களுடன் ஆன்மீகம் குறித்து விவாதங்கள் புரிவார். அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா என்பவர் தினமும் அவர் கூறும் கருத்துக்களையும், அவர் புரிந்த விவாதங்களையும் குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொண்டார். இந்தக் குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் “ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்: கர்மமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி எந்த வழியிலும் இறைவனை அடைய முடியும். இறைவன் ஒரு கற்பவிருட்சம். நாம் அதன் நிழலில் எப்பொழுதும் இருக்க வேண்டும். கடவுள் எல்லா மனிதர்கள் இடத்திலும் உள்ளார். ஆனால் எல்லா மனிதர்களும் கடவுள் இல்லை. நீங்கள் பைத்தியமாய் இருங்கள். உலக சுகங்களுக்காக அல்ல, இறைவனின் அன்பு வேண்டி பைத்தியமாய் இருங்கள். கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்காது. கடுகளவு தற்பெருமை இருந்தாலும் கடவுளை உணர முடியாது. நான் வாழும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து மதங்களும் ஒன்றே என உணரவேண்டும். இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனை தொழ வேண்டும். உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு வாழ்வளிப்பவர் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும். மக்களுள் பெரும்பாலானோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனத்தூய்மையால் மட்டுமே பிரபஞ்ச உண்மையினை உணர முடியும். அறியாமையின் காரணமாகத்தான் அகம்பாவம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அந்த அகம்பாவம் மனிதனை அழிக்கின்றது. உண்மையாய் எளிமையாய் இறைவனிடம் வேண்டினாலே போதும். இறைவனுக்கு கேட்கும். இரவில் தெரியும் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே மனிதா உனக்குக் கடவுள் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே. சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது. முத்தாய்ப்பாக பரஹம்சர் சொன்ன ஒரு சின்ன கதை பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை, பேலூர் காளி கோயிலுக்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த கோயில் ஊழியர்கள், ‘நாங்க தினமும் பண்ற பிரசாதத்தை எங்கிருந்தோ வர்ற எறும்புகள் வந்து மொய்க்கிறதே. அதனால, கடவுளுக்கும் படைக்க முடியலை. பக்தர்களுக்கும் அதைக் கொடுக்க முடியலை’என்று சொல்லி புலம்பினார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்ட பரமஹம்ஸ்ர், ‘இன்னிக்கு கோயில் வாசல்ல ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைச்சிருங்க. அப்புறம் எறும்பு உள்ளே வரவே வராது பாருங்க’ என்றார். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னபடியே கோயில் ஊழியர்கள் வாசலில், சர்க்கரையை ஒரு கைப்பிடி எடுத்து வாசலில் போட்டார்கள். சிறிது நேரத்தில், எறும்புகள் சாரைசாரையாக வந்தன. கோயில் வாசலை அடைந்தன. அங்கே இருந்த சர்க்கரையைக் கண்டன. சர்க்கரையோடு சர்க்கரையாகக் கலந்து புரண்டன. சிறிது நேரத்தில், வந்தவழியே திரும்பிச் சென்றன. அங்கே… கோயிலின் உள்ளே செய்து வைத்த பிரசாதங்களைப் பார்த்த ஊழியர்களுக்கு நிம்மதி கலந்த அதிர்ச்சி. ‘’பாருங்கள் சுவாமி. நீங்கள் சொன்னது போலவே, சர்க்கரையை கோயில் வாசலில் தூவினோம். எறும்புகள் அதைப் பார்த்துவிட்டு, மொய்த்துவிட்டு, அப்படியே போய்விட்டன. இங்கே பிரசாதங்களில் ஒரு எறும்பைக் கூட காணோம். இத்தனைக்கும் விதம்விதமான பிரசாதங்கள் இருக்கின்றன. எப்படி சுவாமி இப்படி?’’ என்று கேட்டார்கள். பரமஹம்ஸர் சிரித்துக் கொண்டே சொன்னார்… ‘’என்ன செய்வது… அந்த எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதானே’’ என்றார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பரமஹம்ஸரே தொடர்ந்தார். ‘’மனிதர்களும் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களையெல்லாம் வைத்திருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷங்களுக்கு மயங்கி, மேலே போகாமலேயே விட்டுவிடுகிறார்கள்’’ என்று சொன்னாராம்! எறும்பின் சின்னதான செயலைக் கொண்டே உலகத்து மனிதர்களுக்கே மிக எளிமையாகவும் அழகாகவும் போதித்த பரமஹம்ஸரை அங்கே இருந்தவர்கள், மீண்டும் நமஸ்கரித்தார்கள்!
இந்திய வானிலைப் பெண், அன்னா மாணி, நினைவு நாள், ‘இந்தியாவின் வானிலைப் பெண்’ என அறியப்படும் அன்னா மாணி 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இயற்பியலாளராகவும் வானிலை நிபுணராகவும் அவர் ஆற்றிய பணி இன்று துல்லியமாக வானிலையைக் கணிப்பதற்கு உதவுகிறது.அன்றைய மெட்ராஸின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அன்னா மாணி ஓராண்டு WCC கல்லூரியில் கற்பித்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை படிப்புக்கான உதவித்தொகை பெற்றார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின் கீழ் வைர மற்றும் மாணிக்கம் ஒளியியல் பண்புகள் குறித்த ஆராய்ந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபி படித்தார்.அன்றைய மெட்ராஸின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அன்னா மாணி ஓராண்டு WCC கல்லூரியில் கற்பித்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை படிப்புக்கான உதவித்தொகை பெற்றார்.நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின் கீழ் வைர மற்றும் மாணிக்கம் ஒளியியல் பண்புகள் குறித்த ஆராய்ந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபி படித்தார். ஏன் அவரை நினைவு கூற வேண்டும்? படித்து முடித்து லண்டனிலேயே தங்கி வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தும் அதை உதறி தள்ளி தனது தாய்நாட்டிற்காக சேவை செய்ய வந்து விட்டார். இன்று நாம் பயன்படுத்தும் வானிலை முன்னறிவிப்பு உபகரணங்களிற்கெல்லாம் முன்னோடி இவர்தான். இந்தியாவிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வானிலை சார்ந்த உபகரணங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார் அன்னா. 1950இல் இந்தியாவில் சோலார் ரேடியேஷன் கண்காணிப்பு நிலையங்களின் நெட்ஒர்க்கை நிறுவியவர் இவர். மேலும் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் மூலங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அன்னா. அது குறித்து தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.அறிவியல் உணர்வு மட்டுமின்றி அவர் மிகுந்த நாட்டுப்பற்று மிக்கவரும் கூட. காந்திய மார்க்கத்தை கடைப்பிடித்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடைகளையே உடுத்தி வந்தார். மேலும் பல்வேறு சுதந்திர போராட்டங்களுக்கு ஆதரவாகவும் இருந்தார். அவர் வாங்கிய விருதுகள் மற்றும் வகித்த பொறுப்புகள்: 1987 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனராக பொறுப்பு வகித்தார். கே.ஆர்.ராமநாதன் விருது. தேசிய அறிவியல் அகாடமி விருது. மறைவு வெறும் ஆராய்ச்சியாளர், நாட்டுப்பற்றாளராக மட்டுமின்றி அன்னா ஒரு சிறந்த பெண்ணியவதியாக வாழ்ந்துள்ளார். பகுத்தறிவு பேசும் அறிவியல் கூட ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிலவி வந்த காலத்திலேயே அதையெல்லாம் உடைத்து சாதித்து காட்டியவர் அன்னா. தன் வாழ்நாளின் இறுதி வரை நாட்டுக்காகவே வாழ்ந்து 2001 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட்16 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் உயிர் நீத்தார் அன்னா மணி.
அடல்பிகாரி வாஜ்பாய் நினைவஞ்சலி ஆட்சிக் கால நிஜச் சாதனைகள் தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் இவர் பிரதமராக பதவியேற்ற பின்தான்… தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது .. இவர் ஆட்சியில்தான் 4.5 ஆண்டுகள் விலைவாசி உயரவில்லை. இவர் ஆட்சியில்தான் பெட்ரோலிய பொருட்கள் விலை எகிற வில்லை … petrol 36/- rs per litre rate. இவர் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3 மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த தொலைபேசி இணைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் பெற்றார்கள்… இந்தியா முழுவதும் விபத்தில்லா நான்கு வழி சாலை வந்தது.. சர்வசிக்ஷ் அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி வளர்ச்சி அடைந்தது. பிரதான்மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டது . இவர் ஆட்சியில்தான் வங்கி வீட்டு கடன் வட்டி குறைந்து பலர் வீடு கட்டினார்கள்.. வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த பலர் வாகனங்கள் வாங்கினார்கள்: விறகு அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய இந்திய குடி மக்கள் பலர் இவர் ஆட்சியில்தான் கேஸ் அடுப்பு வாங்கி உபயோகித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.. இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக இருளில் இருந்த பலருக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது .. இவர் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான தேசிய நெடுஞ் சாலை கள் கிடைத்தது . அதில் தமிழகத்தில் NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை NH 208 மதுரை to கொல்லம் NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம் NH 206 …NH 67 திருச்சி to ராமேஸ்வரம் NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to திண்டுக்கல் மற்றும் NH 45B ஆகியவை. இவர் ஆட்சியின் போதுதான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது.. இவர் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்தது,. இவர் ஆட்சியில் நம்மூர் மேதை விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனாதிபதியானார்,. இவர் ஆட்சியில் தான் பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடப்பட்டது.. இவர் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போக முடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை அடக்கி சுற்றுலா சுலபமானது.. இவர் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலை உருவானது.. இவர் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறை போக்கப்பட்டது.. இவர் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது .. இவர் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது இவர் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்.. கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது .. இவர் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,.. இவர் ஆட்சியில்தான் வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,. இவர் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது.. இவர் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது… நாட்டு மக்களுக்காக மெய்யாலுமே திருமணமே செய்து கொள்ளாத வாஜ்பாய் அவர்களின் பல சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம்.
கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் மறைந்த அச்சுத மேனன் நினைவு நாள் அச்சுத மேனன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கட்சியின் மூத்த உறுப்பனராக இருந்தார். கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருந்தார். 1 நவம்பர் 1969 முதல் 1 ஆகஸ்ட் 1970 வரை முதல்தடவையாகவும் 4–10–1970 to 25–03–1977 வரை இரண்டாம் முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பிற முற்போக்கு ஜனநாயகக் கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தது கேரளாவில்தான்! அந்த ஆட்சி எனும் கப்பலை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனைகளைக் குவித்த காப்டன், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் முதல்வருமான தோழர் சி.அச்சுத மேனன். தூய, நேர்மையான, ஊழலற்ற நிர்வாகம்; மிகத் தீவிரமான நிலச்சீர்திருத்த அமலாக்கம்; ஏழை எளியோருக்கான பெரும் சீர்திருத்தத் திட்டங்களை நிறைவேற்றுதல்; அடிப்படையான ஆய்வு நிலையங்களை நிறுவுதல் போன்ற இன்னபிற நடவடிக்கைகளிலிருந்து பிரிக்கவொண்ணா வகையில் இரண்டறக் கலந்தது அவரது பெயர். நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்த அவர், அரசியலில் புதிய, உயர்ந்த நெறிகளை வகுத்தளித்தார். அவர் தலைமையில் இயங்கிய அரசு. இதன் விளைவாக, எவரும் சாதிக்காத வகையில், கேரளாவில் விவசாயத் தொழிலாளர்கள் என்கிற வர்க்கமே இல்லாமல் போயிற்று. ஏறத்தாழ 25 லட்சம் உழவர்கள், நிலத்தின்மீதான உரிமைகளைப் பெற்றனர்; லட்சக்கணக்கான ஏக்கர் வன நிலங்களையும், பிர்லா வசமிருந்த 30,000 ஏக்கர் நிலம் உட்பட மற்றபிற நிலங்களையும் மறுவிநியோகத்துக்காக அரசு எடுத்துக் கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் குடியிருப்பு மனையும் அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் மட்டுமின்றி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஆச்சார்ய நரேந்திர தேவ், ஸ்ரீ நாராயண குரு, அரவிந்த கோஷ், இன்ன பிறரின் சிந்தனைகளைக் கம்யூனிஸ்டுகள் கற்றறிய வேண்டும் எனவும், காந்திஜியின் அகிம்சைப் பாதையை நாம் தீவிரமாகப் பரிசீலித்தல் அவசியமெனவும் அவர் கருதினார். கேரள சாகித்ய அகாதமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது உள்ளிட்ட விருதுகள் அவரைத் தேடி வந்தன. 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் நாள் திருவனந்தபுரத்தில் அவர் மரணமுற்றார்
