‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை 29-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
உற்சாகமான நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே!
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்று வீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர் களால் ஆதாயம் உண்டாகும்.
மிதுன ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் சோர்வாக இருப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சலுகைகள் கிடைக்கும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.
சிம்ம ராசி அன்பர்களே!
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி களுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
கன்னி ராசி அன்பர்களே!
சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
துலா ராசி அன்பர்களே!
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவல கத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர் களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு ராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்கவேண்டி வரும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
மகரராசி அன்பர்களே!
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியா ளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.
கும்பராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது இழுபறியாகும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என்பதால் மனம் சஞ்சலப்படும்.
மீனராசி அன்பர்களே!
மகிழ்ச்சியான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்..
