தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை ( 5-ம் தேதி) அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, தவெக, உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனைத்து கட்சியினரும் கவுரவம் பார்க்காமல் வாருங்கள் என்று முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூட்டத்தில் பங்கேற்கிறார். விஜய் பங்கேற்க உள்ளார் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஆனந்த் பங்கேற்கிறார்.