இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 26 புதன்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 26-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மாசி மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 26.02.2025 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.18 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று மாலை 04.51 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள்.உங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள். பணியில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் கூடுதல் முயற்சி செய்து சிறந்த செயல்திறனை அளிப்பீர்கள். உங்களின் சிறந்த தவகல் தொடர்பு திறமை மூலம் பல நன்மைகள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் நற்பலன் காணும் அதிர்ஷ்டமான நேரம். புதிய தொழில் தொடர்புகள் பெறலாம். அதன் மூலம் அதிக பணம் பெற இயலும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். உங்கள் இலக்குகளை அடைய மிகவும் பொறுமை வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல வளர்ச்சி காணலாம். உங்கள் முன் இருக்கும் சவாலான பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். திட்டமிட்டு பணிபுரிவதன் மூலம் உங்கள் பணிகளை திறமையாக முடிக்கலாம். இன்று பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று நல்ல பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள் அல்ல. இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கடுமையான சூழ்நிலையை புத்திசாலித் தனமாக கையாள வேண்டும். சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களில் அமைதி காண வேண்டும். உங்கள் பணிகளில் தவறுகள் நேரலாம். அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றலாம். பண இழப்பு காணப்படுகின்றது. உங்கள் நிதிநிலையைக் கையாளும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பதட்டம் மற்றும் பாதிகாப்பின்மை உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். பிரார்தனை மற்றும் இறை வழிபாடு நல்ல பலனளிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் நண்பர்களின் ஆதரவும் அதன் மூலம் நன்மையும் பெறுவீர்கள். உங்கள் செயல்திறனில் சிறந்த வளர்ச்சி காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பொதுவாக திருப்தியான நிலை காணப்படும். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். கையிலுள்ள உபரிப் பணத்தைக் கொண்டு நீங்கள் பயனுள்ள சொத்தை வாங்குவீர்கள். நீங்கள் சிறந்த தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். இன்று உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. பதட்ட உணர்வு காணப்படும்.பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இந்த உணர்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டும்.நல்ல பலன் காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செயலாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம் எதிர்கொள்ளும் தடைகளை ஜெயிக்க முடியும். பண வரவிற்கு இன்று சாத்தியமில்லை. கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. வயிற்று உப்பசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீர்கள். இதனால் நற்பலன்கள் ஏற்படும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அமைதியாக இருக்க முடியும். இன்று பணியில் மந்தத் தன்மை காணப்படும். உங்கள் செயல்களைக் கையாளும்போது பொறுமை இழப்பீர்கள். கவனமுடன் இருந்தால் சிறப்பாக செயலாற்ற இயலும்.உங்கள் வீட்டின் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகமாகும். உங்களின் நெருங்கிய சொந்தங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று பதட்டம் காரணமாக உங்கள் தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

துலா ராசி அன்பர்களே!

இன்று பலன்கள் கலந்து காணப்படும். அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். இன்றைய செயல்களைக் கையாள நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம். உங்கள இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அது உங்கள் சுய முயற்சியை சார்ந்துள்ளது. இன்று அதிகப் பணிகள் காணப்படும். நற்பலன்களை அடைய உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டியது முக்கியம். பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. இன்று தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை மேற்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் இன்று நன்மை அளிக்கும். உங்கள் பணிக்கு சிறந்த பாராட்டு பெறுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு உற்சாகம் அளிக்கும். . இன்று அதிக பணம் காணப்படும். வங்கியில் பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்,

தனுசு ராசி அன்பர்களே!

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இசை கேட்பது அல்லது திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்சிகளின் மூலம் நீங்கள் இன்றைய நாளை சிறப்பக கையாண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். எனவே உங்கள் பணியில் தாமதங்கள் காணப்படும். தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும். அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். இன்று எந்த விதமான ஆரோக்கியப் பிரச்சினையும் இருக்காது. உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

மகர ராசி அன்பர்களே!

இது உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. தேவையற்ற மனக் குழப்பங்கள் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும். இன்று உங்கள் செயல்களில் மந்த நிலை காணப்படும். இன்று நீங்கள் திறமையாக பணியாற்ற இயலாது. இன்று உங்கள் பொறுப்புகளை முடிக்க வேண்டிய நிலைமை காணப்படும். இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். இன்று வரவு செலவு இரண்டும் காணப்படும். பணத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். கால் மற்றும் தொடை வலி இன்று காணப்படும். ஆற்றல் மற்றும் ஆரோக்கியக் குறைவு காரணமாக சோர்வு காணப்படும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். இசை கேட்டல் திரைப்படங்கள் பார்த்தல் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். நீங்கள் பிறரால் தவிர்க்கப் படுவது போல உணர்வீர்கள். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது. இது உங்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் மகிழ்ச்சி காணப்படாது. திடீர் பண நஷ்டத்திற்கான வாய்ப்பு உள்ளது. அதனை சமாளிக்க இயலாத காரணத்தினால் நீங்கள் சற்று எமற்றமடைவீர்கள். பணத்தை கவனமாகக் கையாளவும். முதுகு விறைப்பு மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.நீங்கள் எளிதில் சோர்வடைவீர்கள். ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்.

மீனராசி அன்பர்களே!

இன்று வளர்ச்சி காண்பதற்கு மிகவும் உகந்த நாள். இன்று வாழ்க்கையின் உண்மைகளை அறிந்து கொள்வதற்கான நேரம். இது மகிழ்ச்சி தரும் கற்றல் அனுபவமாக இருக்கும். பணியில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் அனைத்துப் பணிகளிலும் திருப்தி காண்பீர்கள். இன்று அதிகப் பணம் காணப்படும். கையிலுள்ள பணத்தை பயனுள்ள நோக்கங்களுக்காக செலவு செய்வீர்கள். இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *