இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 17 வெள்ளிக்கிழமை 2025 )

 இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 17 வெள்ளிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 17-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் தை மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.01.2025 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.35 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி .இன்று பிற்பகல் 02.24 வரை மகம். பின்னர் பூரம் .உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலைச் சலும் சோர்வும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர் கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே நடைபெறும்.

கடக ராசி அன்பர்களே!

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க் கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில்  லாபம் கூடுதலாக இருந்தாலும்,  பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுக ளும் ஏற்படும்.  உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் வழக்க மான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்க ளால் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்க ளுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசி னாலும் பொறுமை காப்பது அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணி யாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வருகையால் பரபரப்பாகச் செயல்படவேண்டிய நிலை ஏற்படும்.வியாபாரத்தில் பணியாளர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு  மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப் பதில் சற்று தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை யும் விறுவிறுப்பாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. அலுவல கத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச் சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டி களைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.  வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...