இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 04 சனிக்கிழமை 2025 )

 இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 04 சனிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 04-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 04.01.2025 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.09 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.16 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.இன்று அதிகாலை 12.04 வரை அவிட்டம். பின்னர் இரவு 10.51 வரை சதயம். பின்பு பூரட்டாதி.பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகக்கூடும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். தந்தையின் நீண்டநாளைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன் யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உதவியுடன் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர் செல்ல நேரிடும்போது கைப் பொருள் களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாய்வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மற்றவர்களுடன் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கடக ராசி அன்பர்களே!

மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் பிற்பகலுக்கு மேல் எதிலும் நிதானமாக செயல்படவும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். உறவி னர்களின் சந்திப்பு சங்கடம் தருவதாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். பழைய கடன்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றி கரமாக நிறைவேறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்த இழுபறி நிலை மாறும். அதிகாரிகளின் ஆதரவில் காரிய அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மகர ராசி அன்பர்களே!

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பம் தொடர்பான வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்கவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால், தேவையான பணம் கையிலிருப்பதால் சமாளித்துவிடு வீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன ரக ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...