தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

 தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்க்கு நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கிறது. இதற்கிடையே லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டத்திற்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை முதலே தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. சென்னையின் தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூரல் மழை பெய்து வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...